விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செங்குளத்தில் உள்ள கால்வாயைக் கடக்க பாலம் அமைக்கக் கோரியும், கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும் செங்குளம் ஊர் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அருப்புக்கோட்டை அருகே செங்குளம் கிராமத்தில் உள்ள கண்மாய் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் நிரம்பி உபரி நீர் செங்குளம் கிராமத்தின் முன்னால் செல்லும் கால்வாய் வழியாக செல்கிறது.
இந்த கால்வாயைக் கடந்துததான் மற்ற ஊர்களுக்குச் செல்பவர்கள் செல்லமுடியும். இதனால் பள்ளி செல்லும் மாணவர்களும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியவர்களும் முதியவர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இந்நிலையில் கால்வாயைக் கடக்க பாலம் அமைத்துத்தர வலியுறுத்தியும் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் செங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
முற்றுகையில் ஈடுபட்ட மக்களிடம் வட்டாட்சியர் பழனிச்சாமி கோரிக்கை மனுவை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
வட்டாட்சியரின் உறுதியை ஏற்று முற்றுகையில் ஈடுபட்ட செங்குளம் கிராம பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago