கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரசின் சாதனை விளக்க கண்காட்சி: அமைச்சர் வளர்மதி தொடங்கிவைத்தார்

சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் கண்காட்சியை அமைச்சர் வளர்மதி நேற்று தொடங்கிவைத்தார்.

தமிழக அரசின் 4 ஆண்டு சாதனைகள், மக்கள் நலத்திட்டங்களை விளக்கும் புகைப்படக் கண்காட்சி, மாவட்டந்தோறும் நேற்று தொடங்கப்பட்டது. சென்னை மாவட்டம் சார்பில் கோயம்பேட்டில் உள்ள புறநகர் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசின் சாதனை விளக்க கண்காட்சியை அமைச்சர் வளர்மதி நேற்று குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார். இந்தக் கண்காட்சி நாளை வரை நடக்கிறது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கோகுலஇந்திரா, சென்னை மேயர் சைதை துரைசாமி, எம்.பி.க்கள் டாக்டர் ஜெயவர்தன், எஸ்.ஆர்.விஜயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். அரசின் சாதனைகளை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் அமைச்சர்கள் வழங்கினர்.

முதல்வரின் சிறப்புத் திட்டங்களான விலையில்லா அரிசி, ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு தங்கம், விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி, விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டங்கள், மெட்ரோ ரயில் சேவை, மின் உற்பத்தி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்