சிவகங்கை
சிவகங்கையில் பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணற்றை நகராட்சி அதிகாரிகள் ‘கடமைக்கு’ மூடியதால் நகர மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் பயன்பாடு இல்லாத ஆழ்த்துளை கிணற்றில் சிக்கி 2 வயது சுஜித் வில்சன் இறந்தார்.
இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூட ஆட்சியர் ஜெயகாந்தன் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் தங்களது பகுதிகளில் பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறுகள் குறித்த தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே பயன்பாடு இல்லாத ஆழ்த்துளை கிணறு இருப்பதாக நகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள், அந்த ஆழ்த்துளை கிணற்றின் மேலே கல்லை வைத்து சிறிது மண்ணை மட்டும் போட்டு மூடிவிட்டு சென்றனர். இதனால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், ‘பல ஆண்டுகளாக இந்த ஆழ்துளை கிணறு பயன்பாடின்றி உள்ளது. அதை சாதாரணமாக மண்ணை போட்டு மூடி சென்றால் மழை பெய்ததும் கீழே சென்றுவிடும். இதனால் ஆழ்த்துளை கிணற்றை முறையாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
சிவகங்கை வட்டாட்சியர் மைலாவதி ஏனாபுரம் சாலை, கீழகண்டனி, மேலக்கண்டனி, சிவகங்கை நகர் பகுதிகளில் பயன்பாடு இல்லாத ஆழ்த்துளை கிணறுகளை ஆய்வு செய்தார்.
பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்த பயன்பாடு இல்லாத ஆழ்த்துளை கிணறுகளை மூட உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago