சர்வதேசப் புகழ்பெற்ற 100 வயதான யோகா பாட்டி நானம்மாள் காலமானார்; 600-க்கும் மேற்பட்ட யோகா மாஸ்டர்களை உருவாக்கியவர்

By ஆர்.கிருஷ்ணகுமார்

கோவை

ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு மேலாக தினமும் யோகா பயிற்சி செய்ததுடன், 600-க்கும் மேற்பட்ட யோகா மாஸ்டர்களை உருவாக்கிய கோவை நானம்மாள் (100) இன்று காலமானார். இவர் பத்மஸ்ரீ விருது பெற்றவர்.

கோவை கணபதி பாரதி நகரில் 'ஓசோன் யோகா மையம்' என்ற பெயரில் யோகா பயிற்சிக் கூடத்தை 1971-ம் ஆண்டிலிருந்து நடத்தி வரும் நானம்மாள், பொள்ளாச்சி அருகேயுள்ள ஜமீன்காளியாபுரத்தைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவரது குடும்பத்தினர் யோகா, சிலம்பம் உள்ளிட்ட கலைகளில் பாரம்பரிமாய் ஈடுபட்டவர்கள். சிறு வயதிலிருந்தே யோகா பயிற்சியில் ஈடுபட்ட நானம்மாளின் கணவர் வெங்கடசாமி ஏற்கெனவே இறந்துவிட்டார்.

இவர்களது 4 மகள், 2 மகன்களில் தற்போது 5 பேர் உயிருடன் உள்ளனர். மேலும் 12 பேரன்கள், 11 கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்திகள் என எல்லோருக்குமே யோகாவைக் கற்றுத் தந்துள்ளார் நானம்மாள். இவரது குடும்பத்திலேயே 36 பேர் யோகா மாஸ்டர்களாகத் திகழ்கின்றனர். மேலும், 600-க்கும் மேற்பட்டோரை நானம்மாள் யோகா மாஸ்டர்களாக உருவாக்கியுள்ளார். இவரிடம் யோகா பயின்றவர்கள், இந்தியா மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் யோகா பயிற்சி மையங்களை நடத்தி வருகின்றனர். மேலும், பல்லாயிரக்கணக்கானோருக்கு யோகா பயிற்சியும் அளித்துள்ளார்.

150 விருதுகள், 6 தேசிய அளவிலான தங்கப் பதக்கம், 2014-ல் கர்நாடக அரசின் யோக ரத்னா விருது, 2017 மார்ச் 8-ம் தேதி அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் பெண் சக்தி விருது என விருதுகளைக் குவித்துள்ள நானம்மாளுக்கு, மத்திய அரசு கடந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

"கடந்த 15 நாட்களாகவே உணவைக் குறைத்துக் கொண்ட நானம்மாள், நீராகாரம் மட்டும் அருந்தி வந்தார். இன்று (அக். 26) மதியம் 12.30 மணியளவில் அவர் இயற்கை எய்தினார்," என்றார், அவரது மகனும், யோகா மாஸ்டருமான பாலகிருஷ்ணன்.

கடைசி வரை ஆங்கில மருத்துவத்தை நானம்மாள் நாடியதில்லை. "யோகா பயிற்சி, உடல், மனம், அறிவு, உணர்வு ஆகியவற்றை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. யோகா கலையை பல்லாயிரக்கணக்கானோரிடம் கொண்டுசேர்க்க வேண்டுமென்பதே எனது லட்சியம். நூறு வயதைக் கடந்தாலும் யோகா பயிற்சி அளிப்பதைக் கைவிட மாட்டேன். யோகா, இயற்கை மருத்துவம், உபவாசத்தைக் கைக்கொள்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாகவும், மனதை தெளிவாகவும் வைத்திருக்கலாம்" என்று ஏற்கெனவே ஒரு பேட்டியின்போது தெரிவித்திருந்தார் நானம்மாள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்