தமிழகம் தற்கொலை பூமியாக மாறுவதால் அதிமுக அமைச்சர்களிடம் நீதி கேளுங்கள்: கடலூர் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் விவசாயிகள், அரசு அதிகாரிகள் உயிரிழப்பு தொடருவதால் அதிமுக அமைச்சர்களிடம் நீதி கேளுங்கள் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம் புதுச்சத் திரத்தில் திமுக சார்பாக ‘நீதி கேட்கும்’ பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் வரவேற்றார். புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர்கள் மற்றும் தமிழக மாவட்டங்களைச் சேர்ந்த செயலாளர்கள் 14 பேர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் புதுச்சேரி, காரைக்கால், விழுப்புரம், தஞ்சை, நாகை, திருவாரூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினர் பங்கேற்றனர். கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது, அவர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட உதயகுமார் என்பவரை மேடையில் அறிமுகம் செய்தார். பின்னர், அவர் பேசிய தாவது: கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெறும் அதிமுக ஆட்சியில் துயரங்களும், துன்பங் களும்தான் நிறைந்துள்ளன. வீடு, நிலம் வாங்க முடியவில்லை. விற்க முடியவில்லை. பணப் புழக்கம் முடங்கிவிட்டது. முறையாக தேர்தல் நடத்த வேண்டிய தேர்தல் ஆணையமும் எதற்காக இப்படி தேர்தல் நடத்தியது என்பது அனைவருக்கும் தெரியும்.

தொகுதிக்கு தலா 12 ஆயிரம் திமுக வாக்காளர்களை குறி வைத்து வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி வருகின்றனர். உயிரோடு இருப்பவரை இறந்துவிட்டதாக கூறி நீக்கி உள்ளனர். சென்னை பூந்தமல்லியில் வாக்காளர் பட்டிய லில் இறந்தவராக தேர்தல் ஆணை யம் அறிவித்து நீக்கிய உதயகுமார், இதோ மேடையில் உங்கள் முன் இருக்கிறார். நான் அனைத்தையும் ஆதாரத்துடன் பேசுகிறேன்.

இந்த ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. அனைத்துக்கும் நீங்கள் நீதி கேட்பீர்களா? இந்த ஆட்சியில் மக்களிடம் பணம் இல்லை. அரசிட மும் இல்லை. ஆனால், ஆட்சியிலும் அதிகாரத்திலும் உள்ளவர்களிடம் மட்டும் பணம் உள்ளது. 4 ஆண்டில் விவசாயிகள், நெசவாளிகள், அரசு அதிகாரிகள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழகம் தற்கொலை பூமியாக மாறி வருகிறது. காவிரி டெல்டா பகுதியில் உள்ள வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை. இவை அனைத்துக்கும் தமிழக அதிமுக அமைச்சர்களிடம் நீதி கேளுங்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்