குமரியில் கொட்டித் தீர்த்த கனமழை: வீடுகளை சூழ்ந்த வெள்ளம்; பள்ளிகளுக்கு விடுமுறை

நாகர்கோவில்/ திருநெல்வேலி

குமரியில் விடியவிடிய பெய்த கனமழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழை தொடங் கிய நாள் முதல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ரப்பர் பால்வடித்தல், மீன்பிடி தொழில் உள்ளிட்ட பல தொழில்கள் முடங்கியுள்ளன. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைக்கு ஏற்ப குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் முழுவதும் விடிய விடிய கனமழை கொட்டியது. நேற்று காலை 10 மணிக்கு பிறகே மழை ஓய்ந்தது.

தொடர் மழையால் அணை களுக்கு நீர்வரத்து அதிகரித்துள் ளது. திருநெல்வேலி மாவட்டம் கருப்பாநதி அணை, குண்டாறு அணை ஆகியவை முழு கொள்ளள வில் உள்ளதால், இந்த அணைக ளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

திருநெல்வேலியில் தாமிர பரணி, கடனா நதி, குண்டாறு, ராம நதி, சிற்றாறு, குமரி மாவட்டத்தில் பழையாறு, குழித்துறை தாமிர பரணியாறு, வள்ளியாறு உள்ளிட்ட ஆறுகள் மற்றும் கால்வாய்களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. குற்றாலம் அருவிகள், குமரி மாவட் டம் திற்பரப்பு அருவி ஆகியவற் றில் வெள்ளம் பெருக்கெடுக்கி றது. இவற்றில் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது.

நாகர்கோவில் ஊட்டுவாழ்மடம், கோட்டாறு, வாகையடி பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள் ளம் சூழ்ந்தது. குமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே உத்தரவிட்டார். தூத்துக்குடி மாவட் டத்தில் 7-வது நாளாக நேற்றும் பரவலாக மழை பெய்தது. குளங் கள், ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

அதிகபட்சமாக குழித்துறையில் 14 செ.மீ., கோழிப்போர்விளை, குருந்தன்கோடு, சுருளோடு, குல சேகரபட்டினம் ஆகிய இடங்களில் தலா 8 செ.மீ., தென்காசியில் 6 செ.மீ. மழை பதிவானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE