நாங்குநேரி
நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 62.32 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. அதாவது, மொத்தமுள்ள 2,57,418 வாக்குகளில் 1,60,256 வாக்குகள் பதிவாகியுள்ளன.
நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜநாராயணன் உட்பட 23 பேர் களத்தில் உள்ளனர்.
1,27,389 ஆண் வாக்காளர்கள், 1,29,748 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 3 பேர், சர்வீஸ் வாக்காளர்கள் 278 பேர் என, மொத்தம் இத்தொகுதியில் 2,57,418 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 62.32 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.
பாதுகாப்புப் பணியில் எஸ்.பி, 2 ஏடிஎஸ்பிகள், 17 டிஎஸ்பிகள் உட்பட 2,500 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காலை முதல் தொகுதியில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. வாக்குப்பதிவு புறக்கணிப்பில் பாளை, நாங்குநேரி, களக்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட 113 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஈடுபட்டதைத் தவிர வேறு பரபரப்புச் சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை.
மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவுபெறுகிறது. அதற்குள் வாக்குச்சாவடிக்கு வருவோர்க்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago