நாங்குநேரியில் மதியம் 1 மணி வரை 41.34% வாக்குப்பதிவு: தேர்தல் புறக்கணிப்புப் பகுதிகளில் போலீஸ் உயரதிகாரிகள் கண்காணிப்பு

By அ.அருள்தாசன்

நாங்குநேரி

நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதியில் மதியம் 1 மணியளவில் 41.34% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்துக்கு உட்பட்ட நாங்குநேரியில் காலை 7 மணிக்கு தொடங்கியது. ஆரம்பத்தில் சற்று மந்தமாக இருந்த வாக்குப்பதிவு தற்போது வேகமெடுத்துள்ளது. இதுவரை வாக்குப்பதிவு எவ்வித அசம்பாவதிங்களும் இன்றி அமைதியான முறையிலேயே நடந்துவருகிறது.

மதியம் 1 மணியளவில் 41.34% வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதிகாரிகள் ஆய்வு:

நாங்குநேரியின் பாளை ஒன்றியம், களக்காடு ஒன்றியம், நாங்குநேரி ஒன்றியம் ஆகிய 3 ஒன்றியங்களுக்கு உள்ளிட்ட 113 கிராமங்களைச் சேர்ந்த பட்டியிலன மக்கள், பட்டியல் இனத்தைச் சேர்ந்த 7 உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட வலியுறுத்தி தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள மற்ற சமூகத்தினரை வாக்களிக்கவிடாமல் எந்த நெருக்கடியும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக டிஐஜி பிரவீன் குமார், எஸ்.பி. அருண்சக்தி குமார் தலைமையில் போலீஸார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் புறக்கணிப்பு கிராமங்களில் பாதுகாப்புக்காக அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்