மதுரை
மதுரையில் மழைநீர் வாய்க்கால், கழிவுநீர் வாய்கால்களை சுத்தம் செய்து, அதை சுற்றி கம்பி வலைகளை அமைக்கும் பணியை மாநகராட்சி தொடங்கிவுள்ளது. பொதுமக்கள் குப்பைகளைப் போடாமல் தடுக்க மாநகராட்சி இந்த திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் மழைநீர், கழிவு நீர் வெளியேறுவதற்கு வாய்க்கால்கள் உள்ளன. ஆனால், இந்த வாய்க்கால்கள் பல தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
மற்ற வாய்க்கால்களில் கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்லாதவாறு, குப்பைகளை பொதுமக்கள், வியாபாரிகள் கொட்டுகின்றனர். அதனால், மழைநீர் வாய்க்கால்கள், கழிவு நீர் வாய்க்கால்கள் முழுவதும் குப்பை மமாக உள்ளது.
இதனால், பெருமழை பெய்யும்போது மழைநீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்புகளில் புகுந்து விடுகிறது. அதுபோல், கழிவு நீர் நிரந்தரமாக தேங்கி கொசு உற்பத்தி அதிகமாகி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நோய்களும் பரவுகிறது.
அதனால், மாநகராட்சி நிர்வாகம் தற்போது மாநகராட்சியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால், மழைநீர் வாய்க்கால்களைக் கணக்கெடுத்து அந்த வாய்க்கால்களைச் சுற்றிலும் கம்பி வலை அமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.
முதற்கட்டமாக 21-வது வார்டில் பெத்தானியாபுரத்தில் உள்ள அவனியாபுரம், சிந்தாமணி வாய்க்கால்கள் சுத்தப்படுத்தி ‘ஸ்பான்சர்’ மூலம் இரும்பு கம்பி வலை அமைத்துள்ளனர்.
கம்பி வலை போடப்பட்டதால் இந்த வாய்க்கால்களில் பொதுமக்கள் குப்பைகளைத் தூக்கி எரிய முடியாது. குழந்தைகளும் தவறி வாய்க்கால்களில் விழ மாட்டார்கள்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago