மெட்ரோ ரயிலில் ரிட்டர்ன் டிக்கெட் வசதி: விரைவில் கொண்டுவர முடிவு

By கி.ஜெயப்பிரகாஷ்

மெட்ரோ ரயிலில் ‘ரிட்டர்ன் டிக்கெட்’ வசதியைக் கொண்டுவர சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சென்னை மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மெட்ரோ ரயில்களில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணம் செய்து வருகிறார்கள். மெட்ரோ ரயில் தொடங்கப்பட்ட நாள் முதல் இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதில் பயணம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை மெட்ரோ ரயில்களில் இதுவரையில் சுமார் 4 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை வழங்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் ‘வைஃபை’ வசதியை கொண்டு வருவது குறித்து தொழில்நுட்ப குழுவினர் ஆய்வுசெய்து வருகிறார்கள். செல்போன் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை எதிர்காலத்தில் விரிவுப்படுத்தவுள்ளோம்.

மின்சார ரயில் மற்றும் பறக்கும் ரயில்களில் இருப்பது போல், ரிட்டர்ன் டிக்கெட் வசதியை மெட்ரோ ரயிலில் கொண்டுவர வேண்டும் என்று பயணிகள் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே, ரிட்டர்ன் டிக்கெட் வசதியை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். அதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்த வசதி விரையில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்