தமிழக அரசைக் குறை கூறுவதுதான் ஸ்டாலினின் அரசியல் என்றாகிவிட்டது: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி

தமிழக அரசைக் குறை கூறுவதுதான் ஸ்டாலினின் அரசியல் என்றாகிவிட்டது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணிக் கட்சி வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தேமுதிக கட்சிப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு இன்று (அக்.17) காலை தூத்துக்குடியில் இருந்து சென்னை புறப்படுவதற்காக விமான நிலையம் வந்தார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளிக்கையில், "நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுக கூட்டணிக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. நிச்சயமாக இந்தத் தேர்தலில் எங்களது கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் மிகப்பெரிய வெற்றி பெறுவார்கள்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் என்பதால் எதிர் கருத்துகளைக் கூறி வருகிறார். தற்போது இது வாடிக்கையாகிவிட்டது. குறைகூறுவதுதான் தற்போது அரசியல் என்ற நிலையாகிவிட்டது. எதிர்க்கட்சித் தலைவர் என்பதால் எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டும் என்பது அல்ல" என்றார்.

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து அக்.24-ல் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

57 mins ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்