சென்னை
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் தயாரிக்கப்பட்டுள்ள நீர்ப்புவி பவுதிக வரைபடத்தை (நிலத்தடி நீராதார வரைபடம்) பயன்படுத்தி ஆழ்துளைக் கிணறுகள், திறந்தவெளி கிணறுகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு கட்ட மைப்புகளை பொதுமக்கள் உரு வாக்கலாம் என்று வாரிய மேலாண் இயக்குநர் சி.என்.மகேஸ் வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் செயல்படுத்தப்படும் மழைநீர் சேகரிப்பு தொடர்பான கூட்டம் குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் நிலநீர், கணக் கியல் பிரிவைச் சேர்ந்த அலு வலர்கள், ஸ்டேட் வங்கி அதி காரிகள் பங்கேற்றனர்.
இதில் மேலாண் இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் பேசியதாவது:
தமிழகத்தைப் பொறுத்தவரை தாமிரபரணியைத் தவிர வற்றாத ஜீவநதிகள் ஏதுமில்லை. தாமிர பரணியைத் தவிர மற்ற ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் வேறு மாநிலங்களில் உள்ளன. மேலும், தமிழகம் மழை அளவு குறைந்த மாநிலமாகும். கடந்த ஆண்டு சராசரி மழை அளவான 911 மி.மீ.க்கு பதில் 811 மி.மீ மட்டுமே மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் 73 சதவீதம் கடினமான பாறைகள், 27 சதவீதம் மிருதுவான பாறைகள் உள்ளன. கடினமான பாறைகள் உள்ள பகுதிகளில் அதிக அளவு நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு, குறைவான நீரே நிலத்தடிக்கு செல்வதால் நீராதாரம் குறைந்துள்ளது. கடற் கரைப் பகுதிகளில் அதிக நீரை உறிஞ்சுவதால் கடல் நீர் உட்புகும் அபாயமும் உள்ளது. எனவே மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டியது அவசிய மாகிறது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் கட்ட மைப்புகளை உருவாக்க பல வழிகாட்டுதல்கள் வெளியிடப் பட்டுள்ளன. இதன் ஒருபகுதி யாக 385 ஒன்றியங்களுக்கு அதிக அளவில் நிலத்தடி நீர் கிடைக் கக்கூடிய பகுதிகளை குறிக்கும் நீர்ப்புவி பவுதிக வரைபடம் முதல் முறையாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதைப் பயன் படுத்தி, ஆழ்துளை கிணறு, திறந்த வெளிக் கிணறு, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைப் பதற்கான இடத்தை தேர்வு செய் யலாம். இந்த படங்களைப் பொதுமக்கள் பயன்படுத்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊரக வளர்ச்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகங்களை அணுகலாம்.
நிலத்தடி நீர் அளவு மற்றும் தரம் தொடர்பான தகவல்களை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாரி யம் பதிவு செய்து வருகிறது. தமிழ்நாடு குடிநீர்வாரியத் தின் மழைநீர் சேகரிப்பு குறித்த கையேடு மற்றும் விவரங்களை ‘www.twardboard.tn.gov.in’ என்ற இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டப்படி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் புதிய கட்டிடங்களுக்கு தற்போது கட்டாய மாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.தமிழகத்தில் 73 சதவீதம் கடினமான பாறைகள், 27 சதவீதம் மிருதுவான பாறைகள் உள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago