ஒட்டன்சத்திரம்
முறையாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து ஒட்டன்சத்திரம் நகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. நூற்றுக்கும்மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர்.
ஒப்பந்தம் எடுத்தவர் தினக்கூலியாக ரூ.332 ஊதியம் வழங்குவதாகக் கூறி இவர்களைப் பணியில் அமர்த்தியதாக கூறப்படுகிறது. ஆனால் பேசியபடி ஊதியம் தராமல் ரூ.285 மட்டுமே தருவதால் துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து இன்று (அக்.15) காலை ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தை ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் முற்றுகையிட்டனர். பேசியபடி ஊதியம் வழங்க வலியுறுத்தினர். போராட்டம் காரணமாக ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிகளில் துப்புரவு பணி மேற்கொள்ளப்படவில்லை.
போராட்டம் குறித்து ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் கூறுகையில், "துப்புரவு பணிகளுக்கு தேவையான துடைப்பம், மண்வெட்டி உள்ளிட்ட பொருட்களை எங்கள் சொந்த செலவில் வாங்கிகொண்டுவரவேண்டும். மேலும் பேசியபடி ஊதியம் வழங்காமல் குறைத்து வழங்குகின்றனர். இதை கண்டித்து போராட்டம் நடத்திவருகிறோம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றினால் தான் பணிக்கு செல்வோம்" என்றனர்.
துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தினால் ஒட்டன்சத்திரம் நகரின் பல பகுதிகளில் தெருகளில் குப்பைகள் அள்ளப்படாமல் கிடந்தது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago