சென்னையில் நெரிசல் இன்றி விரைவாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்க பொது போக்குவரத்து வசதியை மேம்படுத்துவது எப்படி?- சிங்கப்பூரில் பணியாற்றிய வல்லுநர் கோபிநாத் மேனன் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை

சென்னையில் பொதுபோக்கு வரத்து வசதியை மேம்படுத்துவது குறித்து, சிங்கப்பூரில் பணியாற்றிய போக்குவரத்து வல்லுநர் கோபிநாத் மேனன் பல்வேறு திட்ட ஆலோசனைகளை வழங்கினார்.

சிங்கப்பூரில் உள்ள சாலை போக்குவரத்து ஆணையத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தலைமை அதிகாரி கோபிநாத் மேனன், அங்கு செயல்படுத்திய பொது போக்குவரத்துக் கொள்கை திட்டம் குறித்து சென்னை அடையாறில் உள்ள ஐடிடிபி அலுவலகத்தில் கலந்துரையாடல் நடத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது: சிங்கப்பூரில் போக்குவரத்து நெரி சலை குறைத்து சீரான பொது போக்குவரத்து வசதியை வழங் கும் வகையில் கடந்த 1970-ம் ஆண்டில் பல்வேறு கட்ட ஆய்வுகள் மேற்கொண்டு புதிய கொள்கை உருவாக்கப்பட்டது. இதன்படி, பொதுபோக்குவரத்து வசதியை மேம்படுத்தி தனியார் வாகனங்களை கட்டுப்படுத்துதல், பேருந்துகளுக்கு பிரத்யேக பாதை, ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் இணைப்பு வசதிகள், பல அடுக்கு வாகன நிறுத்தங்கள், விபத்துக்களை தடுப் பதற்கான கட்டமைப்பு பணிகள் மேம்படுத்தப்பட்டன.

அதன்பிறகு, பொதுமக்கள் வசதியாக பயணம் செய்யவும் ஒரே பயண அட்டை மூலம் பேருந்து, ரயில்களில் பயணம் செய்யவும் ‘ஸ்மார்ட் கார்டுகள்’ அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும், ரயில் மற்றும் பேருந்து நிலையங் களுக்கு மக்கள் எளிதாகச் செல்ல குடியிருப்பு பகுதியில் இருந்து சிறிய ரக வாகன வசதிகள் போன்ற பணிகளால் பொதுபோக்குவரத்து வசதியை மக்கள் அதிகமாக பயன்படுத்த தொடங்கினர். விரைவாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்க 3 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் 2 நிமிடங்களுக்கு ஒரு பேருந்தும் இயக்கப்பட்டன.

மேலும், தனிநபர் வாகனங் களை கட்டுப்படுத்தும் விதமாக, ஒருவர் சொந்தமாக கார் வாங்க வேண்டுமென்றால் ரூ.15 லட்சம் பணம் கட்டி அரசுக்கு விண் ணப்பிக்க வேண்டும். இதுவும், 10 ஆண்டுகளுக்கே பொருத்தும். இதன்மூலம் ஆண்டுதோறும் சுமார் 5 பில்லியன் டாலர் அரசுக்கு வருவாய் கிடைத்தது. இந்த நிதி, பொதுபோக்குவரத்து வசதியை மேம்படுத்தவே பயன்படுத்தப் பட்டது. இதனால், பொதுபோக்கு வரத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 45 சதவீதத்தில் இருந்து தற்போது 70 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், சாலை விபத்துகளில் இறப்போர் எண்ணிக் கையும் 70 சதவீதம் குறைந்துள்ளது.

சென்னை போன்ற மாந கரங்களில் மக்களுக்கு சீரான போக்குவரத்து வசதியை வழங்க முதலில் பொதுபோக்குவரத்து வசதியை மேம்படுத்த வேண்டும். பேருந்துகள் செல்ல பிரத்யேக பாதைகளை ஒதுக்கி, அதிகளவில் பேருந்துகளை இயக்க வேண்டும். ரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்ய வசதிக்காக அருகி லேயே இணைப்பு வசதிகள் இருக்க வேண்டும். சாலை விபத்துக்களை குறைக்க சாலைகளில் பொறியியல் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

நியாயமான கட்டணத்தில் மக்கள் பயணம் செய்யும் வகை யில் பொதுபோக்குவரத்து வசதிகளை வழங்கினால், மக்கள் பொதுபோக்குவரத்து வசதிகளை அதிகளவில் பயன்படுத்துவார்கள். இதன்மூலம் சாலை விபத்துகள் குறைவதோடு, சுற்றுச்சூழலும் பாது காக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தச் சந்திப்பின்போது ஐடிடிபி யின் தெற்கு ஆசிய தலைமை திட்ட வல்லுநர் ஸ்ரேயா கடப்பள்ளி, மேலாளர் சிவசுப்பிரமணியன் ஜெயராமன் உட்பட பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்