ரஷ்ய விண்வெளி அருங்காட்சியகங்களை ரசித்த தமிழக மாணவர்கள்

By செய்திப்பிரிவு

ஜெயந்தன்

மாஸ்கோ

ரஷ்யாவில் உள்ள விண்வெளி அருங்காட்சியகங்களை, தமிழகத் தில் இருந்து விண்வெளிக் கல்விச் சுற்றுலா சென்ற மாணவ, மாணவி கள் பார்வையிட்டனர்

விண்வெளி அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சியில் முன்னோடியான ரஷ்யாவில் 10-க்கும் அதிகமான விண்வெளி அருங்காட்சியகங்கள் உள்ளன. அவற்றைக் காண விரும்பும் தமிழக மாணவர்களுக்கு அனுமதி கிடைக்காத நிலை இருந்தது. இந்நிலையில், இந்தியாவுக்கான ரஷ்ய கலாச்சார தூதரகத்தின் ஓர் அங்கமாக செயல்படும் இந்திய - ரஷ்ய தொழில், வர்த்தக சபைக் கும் (Indo Russian Chamber of Commer ce & Industries), தொழில்கள் மற்றும் விண்வெளிச் செயல்பாட்டாளர் களின் சர்வதேச சங்கத்துக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதைத் தொடர்ந்து, தமிழகத் தில் இருந்து 56 பள்ளி மாணவர் கள், 4 ஆசிரியர்கள், ஒரு பத்திரிகை யாளர் அடங்கிய குழுவினருக்கு விண்வெளிக் கல்விச் சுற்றுலாவுக் கான அனுமதியை ரஷ்யக் குடியரசு வழங்கியது.

விமானத்தில் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவுக்குச் சென்ற சுற்றுலாக் குழுவினர், அங்கிருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சென்றனர். அங்குள்ள காஸ்மோனாடிக்ஸ் அண்ட் ராக்கெட் டெக்னாலஜி அருங்காட்சியகத்தில், சோவியத் ரஷ்யாவின் தொடக்ககால விண்வெளித் திட்டங்களில் பயன்படுத்தப்பட்ட ராக்கெட் இன்ஜின்களின் அசல் மாதிரிகள், விண்வெளியில் இருந்து வீரர்கள் பூமிக்கு திரும்ப பயன்படுத்திய ‘ரீஎன்ட்ரி கேப்சூல்கள்’, விண்வெளி உடைகள், சர்வதேச விண்வெளி நிலையத்தில் 161 நாட்கள் பறந்த ரஷ்யக் கொடி உள்ளிட்டவை இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

முத்தாய்ப்பாக, ரஷ்ய விண்வெளி வீரர்கள் கழகத்தின் துணைத் தலைவரான முஷ்கின் அல்யேக் பெட்ரோவிச், மாணவர்களுடன் உரை யாடினார். சுற்றுலாக் குழுவினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள ‘ஹெர்மிட்டேஜ்’ வரலாற்று அருங்காட்சியகம், உலகின் 2-வது பெரிய அருங்காட்சியகம் ஆகும். ரஷ்ய மன்னர்கள், அரசிகள் பயன்படுத்திய பொருட்கள், அவர்களது ஓவியங்கள், சிற்பங்கள், எகிப்திய மம்மி உட்பட உலகம் முழுவதும் இருந்து தருவிக்கப்பட்ட பல்வேறு அரிய பொக்கிஷங்கள் அங்கு பாதுகாக்கப்படுகின்றன.

பின்னர் மாஸ்கோவில் உள்ள ‘ஹோட்டல் காஸ்மாஸ்’ நட்சத்திர விடுதியில் குழுவினர் தங்கவைக் கப்பட்டனர். அங்கிருந்து ஸ்டார் சிட்டி யில் உள்ள யூரி ககாரின் விண்வெளி வீரர்கள் பயிற்சி மையத்துக்கு (GCTC) மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இங்கு ரஷ்ய, இந் திய விண்வெளி வீரர்கள் நேரடியாக பயிற்சிபெறும் இடங்களையும், சர்வதேச விண்வெளி நிலையத்தின் மாதிரியையும் ரசித்தனர்.

கலூகாவில் உள்ள கே.இ.சியோல் கோவ்ஸ்கி வான்வெளி அருங்காட்சி யகமும், கோளரங்கமும் ரஷ்யாவின் விண்வெளி அறிவியல் வரலாற்றை உணர்த்தின.

‘ஆர்எஸ்சி எனர்ஜியா’ உட்பட மாஸ்கோவின் 2 முக்கிய அருங்காட்சி யகங்களையும் பார்வையிட்டனர்.

இந்தோ ரஷ்ய வர்த்தக சபை சார்பில் அதன் செயலாளர் பி.தங்கப்பன் ஒருங்கிணைந்த இந்த விண்வெளிக் கல்விச் சுற்றுலாவில் சென்னை வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளி தாளாளர் வேல்மோகன், முதல்வர் ஹேமலதா ஆகியோரது தலைமையில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்