தேனி
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவி பிரியங்கா மற்றும் அவருடைய தாயார் மைனாவதியை வரும் அக்டோபர் 25-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற நடுவர் பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.
இதனையடுத்து இருவரும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் முதன்முதலில் சிக்கிய மாணவர் உதித் சூர்யா அவரது தந்தை வெங்கடேசன் அளித்த தகவலின் அடிப்படையில் சிபிசிஐடி போலீஸார் மேலும் 4 மாணவர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர். மாணவி அபிராமி, மாணவர்கள் ராகுல், பிரவீன், இர்ஃபான் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர். மாணவி அபிராமி விடுவிக்கப்பட்ட நிலையில் மற்ற மூன்று மாணவர்களும் கைதாகினர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் மாணவி பிரியங்கா மீது சிபிசிஐடி கவனம் திரும்பியது. இதனையடுத்து சென்னை விரைந்த குழு மாணவி பிரியங்கா, அவரது தாயாரை தேனிக்கு நேற்றிரவு (வெள்ளி இரவு) அழைத்துவந்தனர். விடியவிடிய விசாரணை நடந்தது. தேனி சிபிசிஐடி ஆய்வாளர் சித்ராதேவி தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணைக்குப் பின்னர், மாணவியும் அவரது தாயாரும் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற நடுவர் பன்னீர்செல்வம் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது வரும் 25-ம் வரை இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து இருவரும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
முதல்வரிடம் மூன்று மணிநேர விசாரணை..
இதற்கிடையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மாணவி பிரியங்கா படித்த சென்னை தனியார் மருத்துவக் கல்லூரி முதல்வர் தாமோதரன் தேனி சமதர்மபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகினார்.
அவருடன் மருத்துவமனை கண்காணிப்பாளர் பொன்னம்பல நமசிவாயம் மற்றும் மற்றொரு மருத்துவரும் ஆஜராகினர்.
அவர்களிடம் சிபிசிஐடி போலீஸார் மூன்று மணி நேரமாக விசாரணை நடத்தினர். விசாரணையின்போது மருத்துவமனை முதல்வர் ஆவணங்களை ஒப்படைத்துச் சென்றுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago