ஆணவக் கொலைகளை தடுக்க சட்டம் தேவை: ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

‘ஆணவக் கொலை’களை தடுக்க மாநில, மத்திய அரசுகள் தனியாக சட்டம் இயற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று காலை திருப்பூர் வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சிக்கு நிலம் கையகப் படுத்தும் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என மத்திய நிதி அமைச் சர் சொல்கிறார். ஆனால், விவ சாயிகளின் தற்கொலைகளைத் தடுக்க இந்த அரசு எவ்வித நட வடிக்கையும் மேற்கொள்ள வில்லை. தமிழகத்தை பொறுத்த வரை சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. திருச்செங்கோடு கோகுல்ராஜ் உட்பட கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 60 கவுரவக் கொலைகள் நடந்துள்ளன. அவற்றை கவுரவக் கொலைகள் என்று இனி சொல்லக்கூடாது, ‘ஆணவக் கொலைகள்’ என்று தான் அழைக்க வேண்டும். இது போன்ற கொலைகளைத் தடுக்க மாநில, மத்திய அரசுகள் தனி யாகச் சட்டம் இயற்ற வேண்டும்.

தமிழகத்தில் காவல் நிலையங் களில் லாக்கப் மரணங்கள் அதிகரித்துள்ளன. நெல்லை, தூத்துக்குடி போன்ற இடங்களில் கடந்த 10 மாதங்களில் 3 கொலை கள் நடந்துள்ளன. ஜனநாயக முறையில் போராட காவல்துறை அனுமதிப்பதில்லை. ஜனநாயக உரிமைகள் தமிழகத்தில் மறுக்கப் படுகின்றன. ஊழல் முறைகேடு அதிகரித்துள்ளது. இதை தடுக்க ஊழல் தடுப்புச் சட்டம் (லோக் ஆயுக்தா) கொண்டு வர வேண்டும் என மார்க்சிஸ்ட் வலியுறுத்தி வருகிறது.

மெட்ரோ ரயில் கட்டணம் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், சென்னையில் அதிகமாக உள்ளது. இக்கட்டணத்தை குறைக்க தேவை யான நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்