கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு டெங்கு பாதிப்பு குறைவாக உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்

By செய்திப்பிரிவு

சென்னை

ஆந்திரா மற்றும் கர்நாடகா எல்லையில் உள்ள மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளதாக, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மழைக்காலம் தொடங்குவதால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு சுகாதாரத் துறை சார்பில் 30 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் வாகனங்கள் உள்ளிட்ட 160 வாகனங்களை சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று (அக்.9) தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ஆந்திர -கர்நாடக எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி டெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

"கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஒப்பிடுவதைக் காட்டிலும், டெங்கு பாதிப்பே இல்லாத நிலையை உருவாக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது," என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்