சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்: தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

சென்னை

தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருக்கு தமிழக மக்கள் அனைவரும் உள்ளார்ந்த உணர்வுடன் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை மேம்படுத்த சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி இடையே அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய நாட்களில் தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. இது தமிழகத்துக்கு பெருமை சேர்ப்பது மட்டுமின்றி, தமிழகத்தின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தி யுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் உள்ள மாமல்ல புரத்தை தேர்வு செய்ததற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்கள் சார்பிலும், அரசின் சார்பிலும் இவ்விரு தலைவர்களையும் வரவேற்கிறேன்.

பல நூற்றாண்டுகளுக்கு முன் பிருந்தே வணிக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் சீனாவுக்கும் தமிழகத்துக்கும் இடையில் தொடர்பு இருந்துள்ளது என்பது வரலாறு. பண்டைய சீன நாட்டின் தூதுவர் யுவான் சுவாங், பல்லவ நாட்டுக்கு வந்து சென்றுள்ளார் என்பதும், அக்காலத்தில் பல்லவ நாட்டின் துறைமுகமாக விளங்கிய இதே மாமல்லபுரம், இந்த நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டது பொருத்தமானதாகும். சீன நாட்டு டன் கடல் வழி வியாபாரம் மாமல்ல புரம் வழியாக நடைபெற்றதாக வரலாறு கூறுகிறது.

அதேபோல் சோழர்கள் காலத் திலும், சீனாவுடனான வணிக தொடர்புகள் வலுவாக இருந்துள் ளது தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பதாகும். ஏற்கெனவே கடந்த 1956-ம் ஆண்டு சீன பிரதமர் சூ என்லாய், மாமல்லபுரம் அருகில் உள்ள குழிப்பான் தண்டலம் கிராமத்துக்கு வருகை தந்ததை இங்கு நினைவுகூர விரும்புகிறேன்.

இந்த இரு தலைவர்களின் சந்திப்பு யுனெஸ்கோ உலக பாரம் பரிய மையமான மாமல்லபுரத் தில் நடைபெறுவது பண்டைய வரலாற்றின் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சீன அதிபரின் வருகை தமிழகத்துக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே வரலாற்று சிறப்பு மிகுந்த நிகழ்வாகும்.

தமிழகத்துக்கு வருகை புரியும் சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு தமிழக மக்கள் அனைவரும் உள்ளார்ந்த உணர்வு டன் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்