சேலம்
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே இருசக்கர வாகனம் மீது மினி வேன் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 3 வயது குழந்தைக்குக் காயம் ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாந்தகுமார் (35). அவருடைய 3 வயது மகன் தரணிக்கு உடல்நிலை சரியில்லாததால், மகன் மற்றும் தன் நண்பர் முருகன் (40) ஆகியோரை அழைத்துக்கொண்டு இன்று (அக்.9) காலை இருசக்கர வாகனத்தில் சேலம் விநாயக மிஷன் மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்தார். அவர்கள் சங்ககிரியிலிருந்து சேலம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது, மேட்டுக்கடை பஸ் ஸ்டாப் அருகில், பின்பக்கமாக வந்த மினி வேன் ஓட்டுநர் கவனக்குறைவால் இரு சக்கர வாகனத்தின் மீது மோதினார். இதனால் இருசக்கர வாகனத்தின் பின்பக்கம் பலத்த சேதமடைந்தது. இதில், சாந்தகுமார் மற்றும் முருகன் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.
குழந்தைக்குத் தலையில் லேசான காயம் ஏற்பட்டு மயக்க நிலையில் சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இறந்துபோன முருகன் மற்றும் சாந்தகுமார் சடலங்கள் சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சங்ககிரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago