ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனையில் தொடங்கப்பட்ட ‘நான் உங்களுக்கு உதவலாமா?’ திட்டம் ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இத்திட்டத்தை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செயல் படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
ராஜீவ்காந்தி அரசு பொது மருத் துவமனைக்கு தினமும் 9 ஆயிரம் முதல் 12 ஆயிரம் நோயாளிகள் வருகின்றனர். 5 ஆயிரம் பேர் உள் நோயாளிகளாக உள்ளனர். இம்மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், தங்களின் நோய்த் தன்மைக்கு ஏற்ப, சரியான துறை யின் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவை கண்டுபிடித்துச் செல்ல பெரிதும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் நோயாளிகளுக்கு வழிகாட்டவும், நோயாளிகளின் உடல் ஒத்துழைக்காத நிலையில், அவர்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு அழைத்துச் செல்ல வும் ‘நான் உங்களுக்கு உதவ லாமா?’ என்ற மாதிரி திட்டம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இம்மருத்துவ மனையில் தொடங்கப்பட்டது.
இதற்காக 20 பெண் பணியாளர் கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பேச்சு பயிற்சி மற்றும் மருத்துவ மனையின் அமைவிடங்கள் குறித்து செயல் விளக்க பயிற்சி ஆகியவை வழங்கப்பட்டன. அவர்களை எளி தில் அடையாளம் கண்டுகொள்ளும் விதமாக ஆரஞ்சு வண்ண உடையும் வழங்கப்பட்டது. இத்திட்டம் நோயாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இது தொடர்பாக இம்மருத்துவ மனையின் அதிகாரி ஒருவர் கூறும் போது, “இத்திட்டம் நோயாளிகளி டம் நல்ல வரவேற்பைப் பெற் றுள்ள நிலையில், இதற்கான பணியாளர்களின் எண்ணிக் கையை மேலும் உயர்த்த திட்டமிட்டுள் ளோம். எங்களின் மாதிரி திட்டம் தற்போது கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி ஆகிய மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.
நோயாளி ஒருவருடன் வந்த பொன்னேரியைச் சேர்ந்த மரகதம் கூறும்போது, “மருத்துவமனையில் நாம் செல்லவேண்டிய இடத்துக்கு எளிதில் செல்ல ‘நான் உங்களுக்கு உதவலாமா?’ திட்டம் உதவியாக உள்ளது. இத்திட்டத்தை தமிழகத் திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செயல் படுத்த வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago