பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகை: வணிகர்கள், விடுதி நிர்வாகிகளுடன் காவல்துறையினர் ஆலோசனை

By இரா.ஜெயப்பிரகாஷ்

காஞ்சிபுரம்

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி, மாமல்லபுரத்தில் வணிகர்கள், விடுதி நிர்வாகிகளுடன் காவல்துறையினர் ஆலோசனை மேற்கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளமாக விளங்கி வருகிறது. யுனெஸ்கோவால் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள மாமல்லபுரத்தில் இந்தியப் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நடைபெறுகிறது. மூன்று நாள் பயணத் திட்டத்தில், வரும் அக்டோபர் 11 மற்றும் 12-ம் தேதிகளில் இருவரும் மாமல்லபுரத்தில் தங்க உள்ளனர்.

இவர்கள் மாமல்லபுரத்தில் உள்ள கலைச் சின்னங்களைப் பார்வையிடுவதுடன் கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்குகின்றனர். அப்போது முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகள் நடைபெற இருப்பதாகவும் தெரிகிறது.

இவர்கள் வருகையையொட்டி மாமல்லபுரம் கடற்கரை கோயிலைச் சுற்றி மின்விளக்குகள் பொருத்தப்பட்டு மாமல்லபுரம் முழுவதும் ஒளிமயமாகக் காட்சி அளித்து வருகிறது. மேலும் பஞ்சபாண்டவர் ரதம் பகுதியில் இவர்கள் நடந்து செல்வதற்கான பலகைகளால் ஆன நடைபாதை அமைக்கப்படுகிறது. அர்ஜூனன் தபசு பகுதியில் மரத்தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. பயணத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்கள் அகற்றப்பட்டு சாலையை விரிவாக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

காவல்துறையினர் ஆலோசனை

இவர்கள் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாமல்லபுரம் போலீஸார் இன்று (அக்.5) ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காவல்துறையுடன் வணிகர்கள், விடுதி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு காவல் ஆய்வாளர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். இவர்கள் வருகையின்போது கடைகளை மூட வேண்டியதில்லை. சாலைப் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தாத வகையில் வணிகத்தை நடத்தலாம் என்று போலீஸார் தெரிவித்தனர்.

மேலும் விடுதி உரிமையாளர்களிடம் தங்கள் விடுதியில் தங்குபவர்களின் அடையாளச் சான்றுகளைப் பெற வேண்டும். சந்தேகத்துக்கு இடமான வகையில் யாராவது தங்கி இருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இரவு நேரத்தில் யாராவது சந்தேகத்துக்கு இடமானவர்கள் நடமாட்டம் இருந்தால் தங்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் கோரிக்கை விடுத்தனர். இவர்கள் வருகையையொட்டி பல்வேறு பகுதிகளில் போலீஸார் வாகனத் தணிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்