விருதுநகர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் நந்தினி ஆஜர்: மதுவுக்கு எதிரான போராட்டம் தொடரும் என ஆவேசம்

By இ.மணிகண்டன்

விருதுநகர்

மதுவுக்கு எதிராகவும் பிரதமர் மோடியைக் கண்டித்தும் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் மற்றும் கோஷம் எழுப்பியதாகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக விருதுநகர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் நந்தினி மற்றும் அவரது தந்தை இன்று(அக்.4) காலை ஆஜராயினர்.

வழக்கு விசாரணை நவம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், செய்தியாளர்களை சந்தித்த நந்தினி, "மதுவுக்கு எதிராகவும் மோடியை கண்டித்தும் தொடர்ந்து குரல் கொடுப்போம். தமிழகத்தில் பாஜக ஆட்சி மறைமுகமாக நடைபெறுகிறது. தமிழக அரசு ஒரு பொம்மை அரசு" என்றார்.

கடந்த 20.09.18-ம் தேதி விருதுநகர் கச்சேரி ரோடு V.V.R.சிலை அருகில் வழக்கறிஞர் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகிய இருவரும் எந்தவித அரசு அனுமதியும் பெறாமல் மதுவுக்கு எதிராகவும், பிரதமர் மோடியை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்திய கோஷங்கள் எழுப்பினர். அதையடுத்து அவர்கள் இருவரையும் விருதுநகர் மேற்கு போலீஸார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும்படி செயல்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், காவல்துறையினர் பாஜக அரசின் கைக்கூலிகள் என உரத்த குரலில் கோஷம் எழும்பினர். பிரதமருக்கு எதிராக "குடி வீட்டுக்கு கேடு, மோடிநாட்டுக்கு கேடு மற்றும் குடி வீட்டுக்கு, மோடி நாட்டுக்கு கேடு, டாஸ்மாக்கை ஒழித்திட மோடி ஆட்சியை வீழ்த்திட போராடுவோம்" ஆகிய வாசகங்களுடன் பதாகைகளை வைத்து பொது மக்களுக்கு தொல்லையை உண்டாக்கினர் ஆகிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து வழக்கறிஞர் நந்தினி அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை விருதுநகரில் உள்ள முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் இன்று(அக்.4) காலை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் நந்தினி அவரது தந்தை ஆனந்தன் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதையடுத்து வழக்கு விசாரணையை நவம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவர் மருதுபாண்டியன் உத்தரவிட்டார்.

நீதிமன்றத்துக்கு வெளியே வந்த வழக்கறிஞர் நந்தினி அளித்த பேட்டியில், "மதுவுக்கு எதிராகவும் மோடியை கண்டித்தும் தொடர்ந்து குரல் கொடுப்போம்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்