சேலம்
நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் தேடப்பட்டு வந்த மாணவர் முகமது இர்ஃபான், சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கவில்லை. மொரீஷியஸில் மருத்துவம் பயின்று வருகிறார் என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வந்த மாணவர் இர்ஃபான், வேலூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்தவர். இவரது தந்தை முகமது ஷபி ஒரு மருத்துவர். மாணவர் முகமது இர்ஃபான், கடந்த செப்டம்பர் 8-ம் தேதியில் இருந்து கல்லூரிக்கு வராமல் இருந்துள்ளார். அவர் சிகிச்சையில் இருப்பதாகத் தகவல் வெளியானது.
இதனிடையே, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்ததாக எழுந்த புகாரில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் உதித் சூர்யா கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களின் விவரம், சான்றிதழ்கள் உள்ளிட்டவை சரிபார்க்கப்பட்டன. இதில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் முகமது இர்ஃபான் சான்றிதழ்களுடன் ஆஜராகாமல் இருந்தார். எனவே, முகமது இர்ஃபானை, தேனி மாவட்ட சிபிசிஐடி போலீஸார் தேடி வந்தனர்.
இதனிடையே, முகமது இர்ஃபான் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ஆஜராக வேண்டுமென்று கல்லூரியில் இருந்து அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. காலக்கெடுவுக்குள் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில், சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே கைது செய்யப்பட்டதாக வதந்தி பரவியது.
இந்த சூழலில், மாணவர் முகமது இர்ஃபான் சேலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் எண்- 2-ல் இன்று (அக்.1) சரணடைந்தார். நீதித்துறை நடுவர் சிவா விசாரணை நடத்தி, மாணவர் முகமது இர்ஃபானை, வரும் 9-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, முகமது இர்ஃபான் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மாணவர் இர்ஃபான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மாணவர் முகமது இர்ஃபான் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கவில்லை. அவர் மொரீஷியஸில் உள்ள மருத்துவக் கல்லூரியில் கடந்த நவம்பரில் இருந்து படித்து வருகிறார். முகமது இர்ஃபானின் தந்தை கைது செய்யப்பட்டதால், போலீஸாரின் விசாரணைக்கு ஆஜராக, நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இந்த விவரங்களை அவர் தெரிவித்துள்ளார். மொரிஷியஸில் இருந்து விமானம் மூலமாக சேலம் வந்துள்ளார்," என்றார்.
மாணவர் முகமது இர்ஃபான் தொடர்பான விசாரணைக்காக, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி டீன் சீனிவாச ராஜூ, தேனி மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்துக்கு இன்று சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago