மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும்: இரா.முத்தரசன் தகவல்

By அசோக்குமார்

திருநெல்வேலி

உள்ளாட்சித் தேர்தலிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தொடரும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறினார்.

திருநெல்வேலியில் இன்று (அக்.1) அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்திய மாதர் தேசிய சம்மேளன தமிழ்நாடு மாநிலக்குழுவின் 14-வது மாநாடு பாளையங்கோட்டையில் அக்டோபர் 2, 3, 4 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது.

முதல் நாளில் பேரணி மற்றும் பொது மாநாடு நடைபெறுகிறது. இதில், திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி சிறப்புரையாற்றுகிறார். மாநாட்டில், நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், பாலியல் வன்கொடுமைகள், ஆணவ படுகொலைகளை தடுக்க வேண்டும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. வேலையில்லாத் திட்டாட்டம் அதிகரித்து வருகிறது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் இருந்த 1.76 லட்சம் கோடி ரூபாயை நிர்ப்பந்தப்படுத்தி பெற்று, கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்துகின்றனர்.

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளைக் கண்டித்து இடதுசாரிகள் சார்பில் அக்டோபர் 10 முதல் 16-ம் தேதி வரை நாடுதழுவிய பிரச்சார இயக்கம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் அக்டோபர் 13, 14-ம் தேதி அனைத்து நகரங்களிலும் பிரச்சார இயக்கம் நடத்தப்படும். 16-ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சித்தது. கடுமையான எதிர்ப்பு காரணமாக பின்வாங்கியது. இந்நிலையில், இந்தியாவின் மூத்த மொழி தமிழ் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். சந்தர்ப்பவாதத்துக்காக பேச்சோடு நின்றுவிடாமல் தமிழ் மொழி வளர்ச்சிக்கு மோடி உதவி செய்ய வேண்டும். இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வோம். தமிழக மக்கள் திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றிபெறச் செய்வார்கள்.

குடி மராமத்து பணிக்காக முதல்கட்டமாக ரூ.100 கோடி, இரண்டாம் கட்டமாக ரூ.328 கோடி ஒதுக்கீடு செய்ததாகவும், மூன்றாம்கட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். பணம் ஒதுக்கப்பட்டது உண்மை. அது செலவழிக்கப்பட்டது உண்மை. ஆனால், குடி மராமத்து பணி முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை. டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டும் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லவில்லை. எந்தெந்த ஏரி, குளங்களுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கப்ட்டது என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

தமிழக காவல்துறையில் உபகரணங்கள் வாங்குவதில் ரூ.350 கோடி ஊழல் நடந்துள்ளது. உயர் அதிகாரிகள், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு தெரியாமல் இந்த ஊழல் நடந்திருக்காது. எனவே, சுதந்திரமான அமைப்பு மூலம் விசாரணை நடத்தி, ஊழலில் தொடர்புள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீட் தேர்வில் இதுவரை 50 பேர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக செய்தி வருகிறது. இந்த எண்ணிகை இன்னும் அதிகரிக்கக்கூடும். இந்நிலையில், இனிமேல் நீட் தேர்வில் முறைகேடு நடக்காமல் பார்த்துக்கொள்வோம் என்று முதல்வர் கூறியுள்ளார். அப்படியென்றால் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை திரும்ப பெற்றுவிட்டாரா?. நீட் தேர்வு முறைகேட்டுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். ஆனால், நடக்குமா என்பது சந்தேகம்தான். அப்படி நடந்தால் உள்ளாட்சித் தேர்தலிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தொடரும்" இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, முன்னாள் எம்எல்ஏ பத்மாவதி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் காசி விஸ்வநாதன், மாதர் சம்மேளன மாவட்டத் தலைவர் நிஷா, ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் சடையப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்