நாங்குநேரி இடைத்தேர்தல்: அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர் வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்பு

By அ.அருள்தாசன்

நெல்லை

நாங்குநேரி இடைதேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், நாம் தமிழர் வேட்பாளர் ராஜ் நாராயணன் உள்ளிட்ட 24 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது.

நெல்லை நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் பெறபட்ட 46 மனுக்களில் அதிமுக,காங்,நாம்தமிழர் உள்பட 24 மனுக்கள் ஏற்பு. 22 மனுக்கள் தள்ளுபடி செய்யபட்டது என தேர்தல் நடத்தும் அலுவலர் நடேசன் தெரிவித்தார்.

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. நாங்குநேரியில் கடந்த 26-ம் தேதி வரையில் 2 சுயேச்சைகள் மட்டுமே மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

27-ம் தேதி 7 சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று (செப்.30) முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களான அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜ் நாராயணன் ஆகியோர் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் புடைசூழ நாங்குநேரி தாலுகா அலுவலகத்துக்கு வந்து வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

தொடர்ந்து, வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதில், நாங்குநேரி இடைதேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், நாம் தமிழர் வேட்பாளர் ராஜ் நாராயணன் ஆகியோர் மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

46 மனுக்களில் 24 மனுக்கள் ஏற்கப்பட்டது; 22 மனுக்கள் தள்ளுபடி செய்யபட்டது என தேர்தல் நடத்தும் அலுவலர் நடேசன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்