கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே அரசுப் பேருந்து- லாரி மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகினர். 34 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து அரசுப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சாம்பல் பள்ளம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிர் திசையில் வந்த லாரி டயர் வெடித்ததில் லாரி சாலையைக் கடந்து மறுபுறம் வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது மோதியது
இந்தக் கோர விபத்தில் பேருந்து ஓட்டுநர் வேடியப்பன், நடத்துநர் சுதாகர் மற்றும் பயணி சின்னகண்ணு ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 6 பெண்கள் உட்பட 34 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த சூளகிரி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்தில் காயமடைந்த அனைவரையும் உடனடியாக மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் 33 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஓசூர் மருத்துவமனையில் நான்கு பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறி தேவையான மருத்துவ உதவி செய்யவும், உயர் சிகிச்சை அளிக்கவும் சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார். கிருஷ்ணகிரி எஸ்பி பண்டி கங்காதர் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago