தேனி
நீட் தேர்வில் முறைகேடு செய்து சிக்கிய மாணவர் உதித் சூர்யா கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்னை தனியார் மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த அபிராமி, ராகுல், பிரவீன் மற்றும் அவர்களது தந்தையர் உட்பட மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டு தேனி சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதி முறைகேடாக மருத்துவப் படிப்பில் சேர்ந்ததாக சென்னையில் நேற்று ஒரு மாணவி உள்பட 3 பேர் சிபிசிஐடி போலீஸாரிடம் சிக்கினார்கள்.
தேனி நீட் விவகாரம் தொடர்பாக கேரளாவில் இடைத்தரகர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதி முறைகேடாக மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக சென்னையில் நேற்று ஒரு மாணவி உள்பட 3 பேர் சிபிசிஐடி போலீஸாரிடம் சிக்கினார்கள் அவர்களில் ஒருவர் பெயர் பிரவீன். இவர் சென்னையில் தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார். மற்றொரு மாணவரின் பெயர் ராகுல். இவரும் தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார். பிடிபட்ட மாணவியின் பெயர் அபிராமி. இவர் சென்னையை அடுத்த திருப்போரூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார்.
இவர்கள் மூவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள். பிடிபட்ட 3 பேரையும், நேற்று இரவு சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு போலீஸார் கொண்டு வந்தனர்.
அங்கு அவர்களிடம் நீண்ட நேரம் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். விசாரணையின்போது, இவர்களுக்காக உத்தரபிரதேசத்திலும், டெல்லியிலும் வேறு நபர்கள் நீட் தேர்வு எழுதியதையும், இதற்காக லட்சக்கணக்கில் பணம் கைமாறியதையும் 3 பேரும் ஒப்புக்கொண்டதாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நீட் தேர்வில் நடைபெற்ற ஆள்மாறாட்டம் தொடர்பான பிரதான வழக்கு தேனியில் நடைபெற்று வருவதால், மேல் விசாரணைக்காக மாணவர்கள் 1.பிரவீன்2. சரவணன் 3.ராகுல் 4.அபிராமி ஆகிய நான்குபேரும் மற்றும் ராகுலின் தந்தை ,அபிராமியின் தந்தை ஆகிய இருவரையும் கைது செய்து தேனிக்கு கொண்டுவந்தனர். சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் தற்போது விசாரணை நடந்து வருகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago