பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு: பிரத்யுஷா தொழில்நுட்பக் கல்லூரி வழங்கியது

By செய்திப்பிரிவு

பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில, மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பிரத்யுஷா தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிலையம் சார்பில் ரொக்கப் பரிசு, கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

விழாவுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கே.வீரராகவ ராவ் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டார். டிசிஎஸ் துணைத் தலைவர் ஹேமா கோபால், பீடம் நிறுவனத் தலைவர் பி.ராஜாராவ், தலைமை செயல் அதிகாரி பி.பிரத்யுஷா, ஆலோசகர் எம்.வாசு, கல்லூரி முதல்வர் பி.எம்.ப்யூலா தேவமலர், துணை முதல்வர் வி.துளசிபாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கமும், 2 மற்றும் 3-ம் இடம் பெற்றவர்களுக்கு முறையே ரூ.50 ஆயிரம், ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது. மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் 100 உதவித் தொகையும், திருவள்ளூர் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு கூடுதலாக ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன. ஜெ.பவித்ரா, எல்.பி.நிவேதிதா, சி.கவுஷிகா, எஸ்.வி.விக்னேஸ்வரன், ஆர்.பிரவீண், எம்.சரண்ராம், இ.வித்யாவர்ஷினி, பி.பாரதி உள்ளிட்டோர் ரொக்கப் பரிசுகள், கல்வி உதவித் தொகைகளைப் பெற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்