விரைவு ரயிலில் தவறவிட்ட செல்போனை 45 நிமிடத்தில் மீட்டு ஒப்படைத்த ரயில்வே போலீஸ்

By செய்திப்பிரிவு

சென்னை

விரைவு ரயிலில் தொழிலதிபர் தவறவிட்ட செல்போனை புகார் அளித்த அடுத்த 45 நிமிடங்களில் ரயில்வே போலீஸார் மீட்டு ஒப்ப டைத்துள்ளனர்.

ரயில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், விரைவு ரயில்களில் ரோந்துப் பணிக்கு காவலர்களை நியமித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் பாது காப்பு தொடர்பான புகார்களை பதிவு செய்ய கட்டணமில்லா ஹெல்ப்லைன் சேவை எண் '182' மற்றும் 24 மணி நேரமும் இயங் கும் வகையில் உதவி எண் '138', ரயில்வே போலீஸ் சார்பில் ரயில்வே உதவி எண் 1512 ஆகியவற்றுடன் ரயில் பெட்டிகளில் 99625 00500 என்ற உதவி எண்ணும் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஏ.எல்.முருகப்பன் என்பவர் விரைவு ரயிலில் தவறவிட்ட செல்போனை ரயில்வே போலீஸார் உடனடியாக மீட்டு ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பாக தொழிலதிபர் ஏ.எல்.முருகப்பன் கூறியதாவது:

சென்னை எழும்பூரில் இருந்து கடந்த 23-ம் தேதி சிலம்பு விரைவு ரயிலின் முதல் வகுப்பு ஏசி பெட்டி யில் பயணம் செய்தேன். மறுநாள் அதிகாலை 3.55 மணிக்கு தேவ கோட்டை ரோடு ரயில் நிலையத்தில் இறங்கினேன். அங்கிருந்து ரயில் நகரத் தொடங்கியபோதுதான் எனது செல்போனை தவறவிட்டது தெரிந்தது. இதையடுத்து, ரயில்வே காவல் துறையின் 99625 00500 என்ற உதவி எண்ணில் புகார் அளித்தேன்.புகார் அளித்த 45 நிமிடங் களில் எனது செல்போனை கண்டு பிடித்துவிட்டதாக தகவல் தெரி வித்தனர். அதன்பிறகு என் ஆதார் கார்டு மற்றும் ரயில் டிக்கெட்டை பரிசோதித்துவிட்டு, செல்போனை என்னிடம் ஒப்படைத்தனர்.

அந்த செல்போனில்தான் எனது முக்கிய ஆவணங்கள், தொடர்பு எண்கள், குறிப்புகள் எல்லாம் இருந் தன. ரயில்வே போலீஸாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE