பிரதமர் நரேந்திர மோடி 30-ம் தேதி சென்னை வருகை: கிண்டி ஐஐடி வளாகத்தில் மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

சென்னை

கிண்டி ஐஐடி பட்டமளிப்பு விழா வில் பிரதமர் மோடி 30-ம் தேதி கலந்துகொள்வதை முன்னிட்டு மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

சென்னை ஐஐடியின் 56-வது பட்டமளிப்பு விழா வரும் 30-ம் தேதி நடக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். இதற் காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வரும் பிரதமர், பின்னர் ஹெலிகாப்டரில் சென்னை ஐஐடிக்கு செல்கிறார். இதற்காக சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஹெலிபேட் சரிசெய்யப்பட்டுள்ளது. பிரதமரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் டெல் லியில் இருந்து பிரதமரின் தனிப் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று சென்னை வந்து ஆய்வு மேற் கொண்டனர்.

விழா நடைபெறும் ஐஐடி வளாகம், அரங்கம், பிரதமர் தங்க வைக்கப்படும் அறை உள்ளிட்ட வற்றை அவர்கள் ஆய்வு செய்தனர். காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து பிரதமர் உட்பட சில முக்கிய நபர்களுக்கு தீவிரவாதிகள் குறி வைத்திருப்பதாக மத்திய உளவுத் துறை கடந்த 3 நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்தது. இதுபோன்ற பதற்றமான சூழ்நிலையால் பிரத மரின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து தமிழக பாதுகாப்பு பிரிவு போலீஸா ரிடமும் டெல்லி அதிகாரிகள் ஆலோ சனை நடத்தினர்.

நரேந்திர மோடி 2-வது முறை பிரதமராக பதவியேற்றபின் முதல் முறையாக தமிழகம் வருகிறார்.இதனால் வரவேற்பு நிகழ்ச்சிகளை பிரமாண்டமாக நடத்த தமிழக பாஜகவினர் திட்டமிட்டு உள்ளனர்.

ஆனால், பாதுகாப்பு காரணங் களுக்காக அவற்றுக்கு தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படு கிறது. மேலும், விமான நிலையத் தில் வழக்கமான முறைப் படி ஆளுநர், முதல்வர், முக்கிய பாஜக நிர்வாகிகள் மற்றும் சில அதிகாரிகள் மட்டும் பிரதமரை வரவேற்க அனுமதிக்கப்பட உள்ள னர். பட்டமளிப்பு விழாவில் சிறப்பு ரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி, விழா முடிந்ததும் மீண்டும் ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் சென்று, தனி விமானத் தில் டெல்லி செல்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்