அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ரூ.32 லட்சம் மோசடி செய்த பெண்ணை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவரது கூட்டாளி ஒருவரையும் தேடி வருகின்றனர்.
சென்னை பெரவள்ளூர் ஜி.கே.எம். காலனியை சேர்ந்த சரளா என்பவர் உட்பட 11 பேர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். அதில் கூறியுள்ளதாவது:
சென்னை பெரம்பூர் அருகே ஜவஹர் நகரை சேர்ந்த தீபா(36) என்பவர் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி எங்களிடம் இருந்து பணம் வாங்கினார். பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவாளர் வேலை வாங்கித் தருவதாக ரூ.13 லட்சம், வட்டாட்சியர் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.5 லட்சம், ஆட்சியர் அலுவலகம், குடிமைப் பொருள் அலுவலகம், மின் சார துறை போன்ற அரசு அலுவல கங்களிலும், தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் வேலை வாங்கித் தருவதாக ரூ.1.50 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை ஒவ்வொருவரின் தகுதிக்கு ஏற்றவாறு பணம் வாங்கியிருக்கிறார் தீபா. ஆனால் அவர் கூறியபடி ஒருவருக்கு கூட வேலை வாங்கித் தரவில்லை.
பணத்தை கேட்டு நெருக்கடி கொடுக்கவே ரூ.20 பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுத் திருக்கிறார். ஒரு சிலருக்கு பணம் இல்லாமலே செக்கை கொடுத்து ஏமாற்றி இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தனர்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி தீபாவை வியாழக்கிழமை கைது செய்தனர்.
போலீஸ் அதிகாரிகள் கூறுகை யில், “பல அரசாங்க அதிகாரி களுக்கு வேண்டியவர்போல தீபா தன்னை காட்டிக்கொண்டிருக் கிறார். மேலும் கணவரை மதிக்கா மல் முத்துகிருஷ்ணன் என்பவருடன் நெருங்கிப் பழகி, பலரிடம் இருந்து வசூலித்த பணத்தை இருவரும் சேர்ந்து ஆடம்பரமாக செலவழித் துள்ளனர். மேலும் பலரிடம் வட்டிக்கும் பணம் வாங்கி ஏமாற்றி இருக்கின்றனர். மோசடியில் முத்து கிருஷ்ணனுக்கும் பெருமளவில் தொடர்பு இருப்பது தெரியவந் துள்ளது. போலீஸ் விசாரிப்பதை அறிந்த முத்துகிருஷ்ணன் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்” என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago