தஞ்சை, நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

By செய்திப்பிரிவு

சென்னை

தஞ்சை, நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ''வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, விருதுநகர், தஞ்சாவூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்குக் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் நாளை (செப். 26) லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன் பிறகு மழையின் தாக்கம் மெதுவாகக் குறையும். ஆந்திராவில் மேற்குக் கடலோரப் பகுதியில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி, கர்நாடகாவை நோக்கி நகர்ந்துள்ளது. இதனால் மழையின் அளவு படிப்படியாகக் குறையும்.

சென்னை நிலவரம்
சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்'' என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE