மலைக்கோட்டையில் சுல்தான் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு: படக்குழுவினர் வெளியேறினர்

By பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்

திண்டுக்கல் மலைக்கோட்டையில் நடந்த நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகும் படப்பிடிப்புக்கு பாஜகவினர் மற்றும் சில இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் படக்குழுவினர் வெளியேறினர்.

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படத்துக்கு 'சுல்தான்' என தலைப்பு வைக்கப்பட்டது. ராஷ்மிகா மந்தனா இதில் நாயகியாக நடிக்கிறார். 'சுல்தான்' திரைப்படம் முஸ்லிம் மன்னர் திப்பு சுல்தான் பற்றிய கதை என்ற பேச்சும் நிலவுகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மலைக்கோட்டையில் நேற்றிரவு நடைபெற்றது. இதனை அறிந்த இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் படப்பிடிப்பு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலைக்கோட்டையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திப்பு சுல்தான் பற்றிய படத்தை மலைக்கோட்டையில் எடுக்க அனுமதிக்கமாட்டோம் என கோஷமிட்டனர். பரபரப்பான சூழல் ஏற்பட்டதால் போலீஸார் படக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மலைக்கோட்டையிலிருந்து படப்பிடிப்புக் குழுவினர் அனைவரும் வெளியேறினர்.

ஆனால் இது தொடர்பாக படக்குழுவினர் கூறுகையில், ''திப்பு சுல்தான் கதைக்கும் சுல்தான் படத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. சர்ச்சை வேண்டாம் என்றே படப்பிடிப்பை நிறுத்திவிட்டு கிளம்பினோம். சுல்தான் முழுக்க முழுக்க ஒரு கமர்ஷியல் திரைப்படம்'' என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

44 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்