பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருவல்லிக்கேணியில் நரசிம்ம சுவாமி தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

By செய்திப்பிரிவு

திருவல்லிக்கேணி நரசிம்ம சுவாமி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவத் தலங்களில் முக்கியமானது திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில். இக்கோயிலுக்கு உள்ளேயே நரசிம்ம சுவாமி கோயிலும் உள்ளது. தனி விமானம், தனி கொடிக்கம்பம் என கோயிலுக் குள்ளேயே இன்னொரு கோயிலாக காட்சியளிக்கும் நரசிம்மர் கோயிலுக்கு ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் பிரம்மோற்சவ விழா நடக்கும்.

இந்த ஆண்டு பிரம்மோற் சவம் கடந்த 26-ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து புன்னை மரம், சேஷ வாகனம், சிம்ம வாகனம், கருட சேவை, ஹம்ச வாகனம், சூரியப் பிரபை, சந்திரப் பிரபை, அனுமந்த வாகனம், யானை வாகனம் என பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா வந்தார்.

பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. அதிகாலை 5 மணிக்கு புறப்பட்ட நரசிம்மர், 5.45 மணிக்கு தேரில் எழுந்தருளினார். காலை 7.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் மாட வீதிகளில் வலம் வந்த திருத்தேர், காலை 9 மணி அளவில் நிலையை வந்தடைந்தது. இதில் ஏராள மான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தேரோட் டத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பிரம்மோற்சவத்தின் 8-ம் நாளான இன்று காலை பல்லக்கில் லட்சுமி நரசிம்மர் திருக்கோலத்தில் சுவாமி அருள்பாலிக்கிறார். மாலையில் குதிரை வாகனம் நடக்கவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்