பழங்கால கோயில் ஓவியங்களை டிஜிட்டலில் பதிவு செய்யும் பணி விரைவில் நிறைவடையும்: பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் ஓராண்டாக நடத்துகிறது

By செ.ஞானபிரகாஷ்

தமிழகத்திலுள்ள கோயில்கள் மற்றும் அதன் மண்டபங்களில் மூலிகைகளைப் பயன்படுத்தி வரையப்பட்ட பழங்கால ஓவியங்களை டிஜிட்டலில் பதிவு செய்யும் பணியில் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் கடந்த ஓராண்டாக ஈடுபட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் முடிவடைய உள்ளன.

இந்துசமய அறநிலையத் துறை, இந்திய தொல்பொருள் ஆராய்ச் சித் துறை ஆகிய துறைகளின் ஒப்புதலுடன் கோயில்களில் உள்ள பழங்கால ஓவியங்களை டிஜிட்ட லாக்கும் பணியில் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் ஈடுபட் டுள்ளது. இந்நிறுவனத்தைச் சேர்ந்த குழுவினர் மதுரை மீனாட்சியம்மன் கோயில், அழகர்கோயில், தருமபுரி அதியமான் கோட்டையிலுள்ள சென்ட்ராய பெருமாள் கோயில், திருவண்ணாமலை ஜெயின் குகை கோயில் மற்றும் மதுரை மேலூரில் சித்திரசாவடி மண்டபம் ஆகிய ஐந்து கோயில்கள், மண்ட பங்களை முதல்கட்டமாக எடுத்துக் கொண்டனர். இங்கு வரைந்துள்ள பழங்கால ஓவியங்களை புகைப் படம் எடுத்து அதன் சிறப்புகள் தொகுக்கப்பட்டு டிஜிட்டலாக்கப் பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் முருகேசன் 'தி இந்து'விடம் கூறியதாவது:

‘‘தமிழகத்தில் கோயில்கள், மண்டபம் ஆகியவற்றில் ரசாயனம் இல்லாமல் மூலிகை இலைகளில் இருந்து சாறு எடுத்து ஓவியங்களை பல நூறு ஆண்டுகள் முன்பு வரைந்துள்ளனர். இயற்கை சூழல் காரணமாக பழங்கால ஓவியங்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளது. இந்த ஓவியங்கள் விலை மதிப்பில் லாதவை. ஏராளமான கோயில்களில் இதுபோன்ற ஓவியங்களை பார்க்க முடியும். வருங்கால சமூகத்தினர் அறிவதற்காக அதை டிஜிட்டலில் பதிவு செய்யும் பணியை ஓராண் டாக செய்து வருகிறோம்.

இதற்காக இந்து சமய அறநிலை யத்துறை, இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித்துறை ஆகியோரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற் றோம். மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் மீனாட்சி திருக் கல்யாணம் உள்ளிட்ட ஓவியங் களை படம் பிடித்து அதன் முழு தகவலையும் பதிவு செய்துள்ளோம். அதேபோல் அழகர் கோயிலில் ராமாயணம் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. அவற்றை டிஜிட்டலாக்கியுள்ளோம். மேலூர் சித்திரசாவடியிலுள்ள மண்டபத்திலும் ராமாயண ஓவியங்களை எடுத்துள்ளோம்.

தருமபுரி அதியமான் கோட்டை யிலுள்ள சென்ட்ராய பெருமாள் கோயிலில் அழகான ஓவியங்களை யும், திருவண்ணாமலை ஜெயின் குகையில் உள்ள ஓவியங்களையும் பதிவு செய்துள்ளோம். விரைவில் இப்பணிகள் முடிவடைய உள்ளன. தற்போது டிஜிட்டலாக்கப்பட்ட ஓவியங்களின் தன்மை, ஓவியங் களில் உள்ளோர் விவரம், வரலாறு ஆகியவற்றை இப்படங்களுடன் தனி குறிப்பினையும் தயார் செய்து வருகிறோம். இப்பணி முடிந்தவுடன் அடுத்த கட்டமாக மேலும் பல கோயில்களின் ஓவியங்களை டிஜிட்டலாக்கும் திட்டம் உள்ளது’’ என்று அவர் தெரிவித்தார்.

மூலிகை இலைகளில் இருந்து சாறு எடுத்து ஓவியங்களை வரைந்துள்ளனர். இயற்கை சூழல் காரணமாக பழங்கால ஓவியங்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளது. இந்த ஓவியங்கள் விலை மதிப்பில் லாதவை. ஏராளமான கோயில்களில் இதுபோன்ற ஓவியங்களை பார்க்க முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்