சிதம்பரம் மாரியப்பா நகரில் மே 3-ம் தேதி வெடிகுண்டு வெடித்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான சுரேந்திரனை சிதம்பரம் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
சிதம்பரம் மாரியப்பா நகரில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியர் பன்னீர்செல்வத்திற்கு சொந்தமான வீட்டில், பல்கலைக்கழக ஊழியர் அருள்
பிரசாத் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார். இந்நிலை யில் அருள்பிரசாத், தனது கூட்டாளிகளை இவ்வீட்டில் தங்க வைத்திருந்த சமயத்தில் மே 3-ம் தேதி நாட்டு வெடிகுண்டு வெடித்து விபத்து ஏற்பட்டதில், அவ்வீட்டிலிருந்த திண்டுக்கல் ரவுடி மோகன்ராம் என்பவர் படுகாயமடைந்தார்.
இதைத்தொடர்ந்து ரவுடி மோகன்ராம், புதுச்சேரி மருத்து வமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டு கொலைச் சதி செய்யத் திட்ட மிட்ட விபரம் போலீஸூக்கு கிடைத்
ததைத் தொடர்ந்து, சிதம்பரம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
இவ்விசாரணையில், பல்கலைக்கழக ஊழியர் அருள்பிரசாத், ரவுடி சுரேந்திரன், திருவாரூர் சந்தோஷ், சிதம்பரம் பட்டாபிராமன் உள்ளிட்டோர் சதித்திட்டம் தீட்டியவர்களில் முக்கியமானவர்கள் எனத் தெரியவந்தது. இவ்வழக்கில் தொடர்புடைய பல்கலைக்
கழக ஊழியர் அருள்பிரசாத் மே 6-ம் தேதி கைதுசெய்யப் பட்டார். அவரைத் தொடர்ந்து பட்டா பிராமனும், சந்தோஷ்குமாரும் 7-ம் தேதி கைது செய்யப்
பட்டனர்.
முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் சுரேந்திரன் என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் தனிப்படை போலீஸார் சுரேந்திரனை (33) செவ்வாய்கிழமை கைது செய்தனர். இதை தொடர்ந்து புதன்கிழமை அதிகாலையில் அண்ணாமலைநகர் போலீஸார் சுரேந்திரனை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago