புதுச்சேரி
மொழியைத் திணிக்கவே முடியாது எனவும், இவ்விஷயத்தில் நாம் பேசாமல் இருப்பதே பெரிய அடியாக இருக்கும் என்றும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் 97-வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள மொழியியல் பண்பாட்டுஆராய்ச்சி நிறுவனத்தில் 'கி.ரா. 97 நூற்றாண்டை நோக்கி' என்ற தலைப்பில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று (செப்.16) நடைபெற்றதுது. இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உட்பட பலரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ராமகிருஷ்ணன், கி.ரா.வுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என கூறினார்.
இதையடுத்து, நிகழ்ச்சியில், தற்போது இந்தியாவின் அடையாளமாக இந்தி மொழி இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்தாளர் கி.ரா பதிலளித்துப் பேசியதாவது:
"இவ்விஷயத்தில் கருத்தே தேவையில்லை. அது அவருடைய கருத்து. அதை நாம் கட்டாயம் கேட்க வேண்டும் என்று அவர் சொல்லவில்லை. அவர் கருத்து அவருடையது. நம் கருத்து நம்முடையது. மொழியை திணிக்க முடியாது. ஏற்கெனவே திணிக்க முயன்று இங்கு அடி வாங்கியுள்ளனர். மீண்டும் திணிக்க வந்தால் கூடுதலாக நான்கு அடிதான் கிடைக்கும். எக்கருத்துமே மாறிக்கொண்டே இருக்கும். உண்மையில் இவ்விஷயத்தில் நாம் பேசாமல் இருந்தாலே பெரிய அடியாக இருக்கும்," என்று தெரிவித்தார்.
செ.ஞானபிரகாஷ்
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago