ரஜினியிடம் பணம் பறிக்க வழக்கு தொடரவில்லை: முகுந்சந்த் போத்ரா விளக்கம்

ரஜினியிடம் பணம் பறிப்பதற் காக வழக்கு தொடரவில்லை என்று பைனான்சியர் முகுந் சந்த் போத்ரா கூறியுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த பைனான்சியர் முகுந்சந்த் போத்ரா, உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய் திருந்தார். ரஜினிகாந்தின் சம்பந்தி என்று சொல்லி இயக் குநர் கஸ்தூரிராஜா தன்னிடம் ரூ.65 லட்சம் கடன் வாங் கியதாகவும், பணத்தை திருப் பித் தராததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க ரஜினிகாந்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் கோரியிருந்தார்.

இதைத்தொடர்ந்து தன் னிடம் பணம் பறிக்கும் நோக் கத்தில் பைனான்சியர் வழக்கு தொடர்ந்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் ரஜினி காந்த் பதில் மனு தாக்கல் செய்தார். இதுகுறித்து பைனான்சியர் முகுந்சந்த் போத்ரா நேற்று நிருபர் களிடம் கூறியதாவது:

பணத்தை திரும்பக் கொடுக்க முடியாத பட்சத்தில் என் மகன்களும், சம்பந்தி என்ற முறையில் ரஜினி காந்தும் பணத்தை திரும்ப கொடுப்பார்கள் என்று கஸ்தூரிராஜா கடிதம் எழுதிக் கொடுத்ததால்தான் ரஜினிகாந்திடம் பணத் தைக் கேட்டோம். மற்றபடி ரஜினிகாந்திடம் பணம் பறிக் கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. அவரிடம் இருந்து அன்பைத்தான் எதிர்பார்க் கிறோம். அவர் இந்தப் பிரச் சினையை பேசித் தீர்த்தால் போதும். பணம் பறிக்கும் முயற்சி என்று அவர் கொடுத்துள்ள மனுவை வாபஸ் வாங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்