சு.கோமதிவிநாயகம்
கோவில்பட்டி
எட்டயபுரம் அருகே கண்மாயை தூர்வாரி, வீடுகள்தோறும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்து கிராம மக்கள் அந்த கிராமத்தை முன்னுதாரணமாக ஆக்கி உள்ள னர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டய புரம் அருகே பேரிலோவன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட முதலிப்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு விவ சாயமும், கால்நடை வளர்ப்பும் பிரதான தொழிலாக உள்ளன.
கிராமத்தில் 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட புதுக்கண்மாயில் 8 ஏக்கர் அளவுக்கு மண்மேடாகி கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து காணப்பட்டன. மீதமுள்ள 7 ஏக்க ரும் மண் நிரம்பி தண்ணீர் தேங்க முடியாத நிலை இருந்தது. இத னால் விவசாயம் பாதித்து, கால் நடைகளுக்கு கூட தண்ணீர் கிடைக் காத நிலை ஏற்பட்டது.
இங்குள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்கள் இணைந்து, விளாத்திகுளம் ‘வேம்பு மக்கள் சக்தி’ இயக்கத்தை நாடினர். அவர்களது உதவியுடன் கண் மாயை முழுவதும் தூர்வாரினர். ஊரில் உள்ள 30 கான்கிரீட் வீடுகளுக்கும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்து கொடுத்தனர்.
இதுகுறித்து முதலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுமதி கூறும்போது, ``எங்கள் கிராமம் வானம் பார்த்த பூமி. வைப்பாற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து, அதிலிருந்து குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. அந்த தண்ணீர் உவர்ப்பாக மாறிவிட்டது. இதனால் ஒரு குடம் குடிநீர் ரூ.10 விலை கொடுத்து வாங்கினோம்.
எனவே, கண்மாயை தூர்வார முடிவு செய்தோம். விளாத்திகுளம் வேம்பு மக்கள் சக்தி இயக்கத்தின் உதவியுடன், எங்கள் கிராம கண் மாய் தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டு அழகாக காட்சி அளிக்கிறது. இதே கையோடு, எங்கள் ஊரில் உள்ள காரை வீடு கள் அனைத்துக்கும் மழைநீர் சேக ரிப்பு தொட்டி அமைத்து கொடுத்து விட்டோம். இங்குள்ள காளியம்மன் கோயில் அருகே ஆழ்துளை கிணறு அமைத்து, ஊர் முகப்பில் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் பிரச்சினையும் தீர்க்கப்பட்டுள்ளது.
இதை கேள்விப்பட்ட அருகே உள்ள கிராம மக்கள், தங்களது கிராமத்திலும் இதுபோன்ற பணிகள் நடக்க வேண்டும் என எங்களை நாடி வருகின்றனர். இதுவே மிகப் பெரிய விழிப்புணர்வு. எங்கள் கிராமம் முன்னுதாரணமாக விளங்கு கிறது. தற்போது கண்மாயைச் சுற்றி மரக்கன்றுகள் நடுவதற்காக மழையை எதிர்பார்த்து காத்தி ருக்கிறோம் என்றார் அவர்.
‘வேம்பு மக்கள் சக்தி’ இயக்க திட்ட ஒருங்கிணைப்பாளர் சு.ஜெய சீலன் கூறியதாவது: முதலிப்பட்டி கிராம கண்மாயை தூர்வாரியது மட்டுமின்றி, அதற்கான நீர்வரத்து ஓடைகளும் சரி செய்யப்பட்டன. எங்களது பணி சிறிதுதான்.
ஆனால், கிராம மக்கள் காட்டிய முனைப்பால்தான் அனைத்து பணிகளையும் முடிக்க முடிந்தது. கண்மாயை அவர்கள் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என அறி வுரை வழங்கி உள்ளோம் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago