மாநகர பேருந்துகளில் டிக்கெட் இல்லாமல் பயணம்: 25,555 பேரிடம் ரூ.24.24 லட்சம் அபராதம் வசூல்

கடந்த 3 மாதங்களில் மாநகர பேருந்துகளில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 25,555 பேரிடம் மொத்தம் ரூ.24.24 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்களை கண்காணிக்கும் வகையில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைத்து மாதந்தோறும் பல்வேறு இடங்களில் திடீரென பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட்ட சோதனையில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 9,089 பேரிடமிருந்து ரூ.8 லட்சத்து 67 ஆயிரத்து 150 அபராதமும், மே மாதத்தில் நடத்தப்பட்ட சோதனையில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 8,209 பேரிடம் ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்து 650 அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் நடத்தப்பட்ட சோதனையில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 8,257 பேரிடம் ரூ.8 லட்சத்து 6 ஆயிரத்து 450 அபராதம் வசூலிக்கப்பட்டது. கடந்த 3 மாதங்களில் மட்டுமே டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 25,555 பேரிடம் மொத்தம் ரூ.24 லட்சத்து 24 ஆயிரத்து 250 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

52 secs ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்