பள்ளிகள் அருகே ஹெல்மெட் சோதனை கூடாது

By செய்திப்பிரிவு

பள்ளிகளுக்கு அருகிலும், தெருக்களிலும் ஹெல்மெட் சோதனை நடத்தக்கூடாது என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீட்டருகே இருக்கும் பள்ளியில் குழந்தைகளை விடுவதற்கு வருபவர் களும், அருகே இருக்கும் தெருக்களில் உள்ள கடைகளுக்கு செல்பவர்களும் சாதாரண மாக மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வருவார்கள். அந்த இடத்தில் போலீஸார் நின்று கொண்டு சோதனை என்ற பெயரில் தங்களை சோதனை செய்வதாக கூறி கஷ்டப்படுத்து வதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

புறநகர் காவல் ஆணையராக ஜாங்கிட் இருந்தபோது, இதே போன்ற பிரச்சினை இருந்தது. அப்போது அது அவரது கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து, “பள்ளிகள், தெருக்கள் மற்றும் வீட்டின் அருகிலேயே செல்பவர்களை பிடித்து சோதனை நடத்தக் கூடாது” என்று அவர் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து போலீஸார் இதுபோன்ற சோத னைகளை நிறுத்தினர். இப் போது மீண்டும் போலீஸார் பள்ளிகள் அருகே நின்று சோதனை என்ற பெயரில் பெற்றோரை கொடுமைப் படுத்துவதாக கூறப்படுகிறது. இதற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்