என் தலைவர் அண்ணா, கருணாநிதி; கட்சி திமுக: மதுரையில் மு.க.அழகிரி திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணையப்போவதாக தகவல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், ‘என் தலைவர் அண்ணா, கருணாநிதி, என் கட்சி திமுக’ என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலின்போது பொருளாளர் மு.க.ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டார். அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகிறது. மதுரையில் அவரது நெருங்கிய ஆதரவாளர்களாக இருந்த பலர், மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களாக மாறிவிட்டனர். மு.க.அழகிரியின் நெருங்கிய ஆதரவாளரான நடிகர் நெப்போலியன், கடந்த ஆண்டு டிசம்பரில் பாஜகவில் இணைந்தார். மற்றொரு ஆதரவாளரான நடிகர் ஜே.கே.ரித்திஷ், அதிமுகவில் ஐக் கியமானார். இருப்பினும் மு.க.அழ கிரி அமைதியாக இருந்து வரு கிறார்.

இந்நிலையில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, ஜூலை 15-ம் தேதி மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் நடைபெறும் விழா விலும், விருதுநகரில் நடைபெறும் காமராஜர் பிறந்த நாள் விழாவிலும் பங்கேற்பதற்காக மதுரை வருகி றார். அப்போது அமித்ஷா முன் னிலையில் மு.க.அழகிரி பாஜக வில் இணையவிருப்பதாக கடந்த இரு நாள்களாக செய்திகள் பரவின. இதேபோல் சமூக வலை தளங்களிலும், ஊடகங்களிலும் தகவல்கள் வந்தன.

இந்நிலையில் மதுரை வில்லா புரத்தில் உள்ள தனது ஆதரவா ளர் வீட்டு காதணி விழாவில் மு.க.அழகிரி நேற்று பங்கேற்றார். அப்போது இதுபற்றி செய்தியாளர் கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தான் பாஜகவில் இணையப்போவ தாக செய்தி வெளியிட்ட ஊடகத் திடம் போய் கேளுங்கள் என்றவாறு காரில் ஏறிச் சென்றுவிட்டார்.

இது தொடர்பாக மு.க.அழகிரி யிடம் தொலைபேசியில் கருத்து கேட்கப்பட்டது. அவர் `தி இந்து’ விடம் தொலைபேசியில் கூறும் போது, ‘‘என் தலைவர்கள் அண்ணா, கருணாநிதி, என் கட்சி திமுக தான்’’ என்றார். இதன்மூலம் தான் பாஜகவில் சேரப்போவதாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்களுக்கு மு.க.அழகிரி தற் போதைக்கு முற்றுப்புள்ளி வைத் துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்