அனுமதியின்றி பல ஆயிரம் கி.மீ. நீளத்திற்கு கேபிள்கள்:   இன்டெர்நெட் , கேபிள் நிறுவனங்களுக்கு மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள (Optical Fibre Cable) கேபிள்களுக்கு உரிமையாளர்கள் மாநகராட்சியை அணுகி உடனடியாக தடவாடகை செலுத்தி அனுமதி பெறவேண்டும். தவறும்பட்சத்தில் கேபிள்கள் துண்டித்து அகற்றப்படும் என ஆணையர் பிரகாஷ், தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த சென்னை மாநகராட்சி அறிவிப்பு:

“பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள தனியார் நிறுவனங்களின் கண்ணாடி இழை கேபிள்கள் (Optical Fibre Cable) மற்றும் தொலைக்காட்சி கேபிள்கள் முறைப்படுத்துதல் மற்றும் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள வடங்களை அகற்றுவது குறித்த ஆய்வுக்கூட்டம் ஆணையர் பிரகாஷ்,தலைமையில் நேற்று ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கண்ணாடி இழை கேபிள்கள் (Optical Fibre Cable) மற்றும் தொலைக்காட்சி கேபிள்கள் அமைக்க, சுமார் 5316 கிலோ மீட்டர் நீளத்திற்கு 26 நிறுவனங்கள் அனுமதி பெற்றுள்ளன. இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிடவும், அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ள கேபிள்கள் குறித்தும், கணக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 34,893 தெருக்களில் மாநகராட்சி பொறியாளர்களால் இதுநாள்வரை 8,505 தெருக்களில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வுகளின்படி, அனுமதியின்றி சுமார் 4,449 கி.மீ. நீளத்திற்கு கேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இவற்றில் மாநகராட்சியிடம் அனுமதி பெற்ற நிறுவனங்களில் 20 நிறுவனங்களால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட சுமார் 1,361 கி.மீ. நீள கேபிள்கள் நிறுவப்பட்டுள்ளன எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட கணக்கீடுகள் அனைத்தும் நிலத்திற்கு மேற்பரப்பில் செல்லும் கேபிள்கள் குறித்த தகவல்கள் ஆகும். இதே போன்று நிலத்திற்கு கீழ் பதியப்பட்டுள்ள கேபிள்கள் மற்றும் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ள கம்பங்கள் குறித்தும் தொடர்ந்து கணக்கிடும் பணிகள் நடைபெறவுள்ளதால், மேலும் கூடுதலான நீளத்திற்கு அனுமதியின்றி கேபிள்கள் அமைக்கப்பட்டிருக்கும் என கருதப்படுகிறது.

மாநகராட்சியிடம் குறிப்பிட்ட நீள அளவிற்கு அனுமதி பெற்று அதைவிட கூடுதலான அளவிற்கு கேபிள்கள் பதித்துள்ள நிறுவனங்கள் அவற்றிற்கான தடவாடகையை செலுத்தவும், மாநகராட்சியிடம் எந்தவித அனுமதியும் பெறாமல் கேபிள்கள் அமைத்துள்ள நிறுவனங்கள் அனுமதி பெறவும், தடவாடகையை செலுத்தவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எனவே அனுமதி பெறவும், தடவாடகை செலுத்தவும் தவறும்பட்சத்தில் அந்நிறுவனங்களின் கேபிள்கள் துண்டிக்கப்பட்டு இதுநாள் வரை பயன்படுத்தியதற்கான அபராத தொகையுடன் கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆணையர் பிரகாஷ், தெரிவித்துள்ளார்”.

இவ்வாறு மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேபிள், இண்டெர்நெட் நிறுவனங்கள் பட்டியலையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:

இதுவரை கணக்கிடப்பட்டதில் அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள் கூடுதலாக கேபிள்கள் அமைத்துள்ளது குறித்த விபரம்:

Cable TV/OFC Operators Length in Km
1 Kal Cables 31.73
2 Jak Communication 14.65
3 Tamizhaga Cable TV 14.81
4 Citycom Network 2.95
5 TATA Communication (Broadband) 6.75
6 Hathway datacom 119.07
7 VK Digital Network 8.69
8 Vodafone idea 1.71
9 Tata tele service 13.127
10 BSNL 9
11 AADHAR Digital 25.54
12 Jio Digital 343.288
13 White Field com 1.04
14 Bharathi Airtel LT 46.38
15 Tamilnadu Arasu cable tv 3.45
16 You Broadband ltd 25.81
17 Tata Commmunication 21.89
18 ACT 603.61
19 I Solutions 6.61
20 Reliance Comm 60.85
Total length of additional cables 1361

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்