மெரினா கடற்கரையில் கடைகள், மீனவர்களுக்கான அங்காடிகள்: உயர் நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி பதில்

By செய்திப்பிரிவு

சென்னை,

மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களுக்கு வழங்கும் உதவித் தொகையை அதிகரித்து வழங்குவது குறித்து பதிலளிக்கும் படி தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மெரினா கடற்கரையில் கடைகளை அமைப்பது, மீனவர்களுக்கான அங்காடிகள் குறித்து சென்னை மாநகராட்சியும் பதிலளித்துள்ளது.

மீன்பிடித் தடைக்காலத்தை 45 நாட்களிலிருந்து 61 நாட்களாக அதிகரித்தபோதும் 5,000 ரூபாய் மட்டுமே உதவித்தொகையாக வழங்கப்படுவதாகவும், இதனை அதிகரிக்கக் கோரி மீனவர் நலன் என்ற அமைப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கை குறித்து தமிழக அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மீனவர் நலன் மற்றும் மேம்பாடு குறித்து முராரி ஆணையம் அளித்த 21 பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி அந்த அமைப்பு தொடர்ந்த மற்றொரு வழக்கில், தேசிய மீன்பிடித் தொழில் குறித்த புதிய கொள்கையின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு கால அவகாசம் கோரியது.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இறுதி அவகாசம் வழங்குவதாக தெரிவித்ததுடன், தவறினால் மத்திய மீன்வளத் துறை அதிகாரிகளை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்தனர்.

மெரினா கடற்கரை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக்கோரியும் அந்த அமைப்பு தொடர்ந்த மற்றொரு வழக்கில் பதிலளித்த சென்னை மாநகராட்சி மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் அருகே 2 ஏக்கர் நிலப்பரப்பில் 350 மீனவர்களுக்கென மீன் அங்காடிகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு வருவதாகவும், பயோ மெட்ரிக் மூலமாக பயனாளிகள் அடையாளம் கண்டு கடைகள் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தற்போது மெரினா கடற்கரையில் உள்ள கடைகளின் எண்ணிக்கைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் 800 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

சென்னை மெரினாவை அழகுபடுத்த எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தையும், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைக்கும் அமல்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து இந்த வழக்குகள் அனைத்தையும் அக்டோபர் 16-க்கு ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்