திருவோண பூஜைக்காக சபரிமலை கோயில் நடை வரும் 9-ம் தேதி திறப்பு

By என்.கணேஷ்ராஜ்

சபரிமலை,

ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருவோண பூஜை வழிபாட்டிற்காக சபரிமலை கோயில் வரும் 9-ம் தேதி நடை திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து 13-ம் தேதி வரை சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற உள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோயில் ஒவ்வொரு மலையாள மாதத்தின் கடைசிநாள் திறக்கப்படும். அன்று மாலை 5மணிக்கு திறக்கப்பட்டு ஐயப்பன் மீது உள்ள விபூதிக் காப்பு எடுக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். மறுநாள் காலை 5 மணியில் இருந்து கணபதி ஹோமம், சந்தன அபிஷேகம், நெய் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடைபெறும்.

இது போன்று 5 நாட்களுக்கு பூஜைகள் நடைபெறும். பின்பு இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் எனும் தாலாட்டுப்பாடலுடன் நடை சாத்தப்படும்.

மாதத்துவக்கத்தில் மட்டுமல்லாது, பங்குனிஉத்திரம், சித்திரை விஷூ, பிரதிஷ்டை தினவிழா உள்ளிட்ட நாட்களிலும் நடை திறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறும்.

ஓணம் பண்டிகை வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து திருவோணபூஜை வழிபாட்டிற்காக வரும் 9-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து 13-ம் தேதி வரை சபரிமலையில் பல்வேறு வழிபாடுகள், பூஜைகள் நடைபெறும்.

ஓணம் பண்டிகைக்காக கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

13 அன்று நடை சாத்தப்பட்டு புரட்டாசி மாத பூஜைக்காக மீண்டும் 16-ம் தேதி நடை திறக்கப்பட உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்