ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்கக்கோரி போரூர் ஏரியில் ‘தண்ணீர் நடை பயணம்’

ஆக்கிரமிப்புக்குள்ளான போரூர் ஏரி பகுதிகளை மீட்கக் கோரி, தண்ணீருக்கான பொதுமேடை சார்பில் நேற்று போரூர் ஏரிக் கரைகளில் ‘வாட்டர் வாக்’ என்ற பெயரில் தண்ணீர் நடை பயணம் நடந்தது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போரூர் ஏரி, தமிழக தலைநகர் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்று. 822 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, பல்வேறு ஆக்கிரமிப்புகளால் தற்போது 200 ஏக்கராக சுருங்கி விட்டது.

இச்சூழலில், போரூர் ஏரிப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பகுதியை அரசு கையகப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள் ளிட்ட அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள் தற்போது வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் சுற்றுச்சூழல் பாது காப்பு அமைப்பான, ‘பூவுல கின் நண்பர்கள்’ அமைப்பின் சார்பில் சென்னையில் உள்ள நீர் நிலைகளை பாதுகாப்பதற்காக, ‘தண்ணீருக்கான பொதுமேடை’ என்ற இயக்கம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்புக்குள்ளான போரூர் ஏரி பகுதிகளை முழு மையாக மீட்டு, ஏரியின் மொத்த பரப்பான 822 ஏக்கர் பரப்பளவில் நீரினை தேக்கி வைத்து, சென் னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போரூர் ஏரியில் 7 அடி ஆழத்துக்கு மேல் சவுடு மண் எடுக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை இந்த இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இதன்ஒருபகுதியாக இக்கோரிக்கைகளை முன்வைத்து, நேற்று போரூர் ஏரிக்கரைகளில், வாட்டர் வாக் என்ற தலைப்பில் ‘தண்ணீர் நடை பயணம்’ என்ற நிகழ்ச்சி நடந்தது.

இதில் 60 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, ‘போரூர் ஏரி.. மக்கள் ஏரி’ ‘ஏரியைக் காப்போம்.. இழந் ததை மீட்போம்’ ‘ஏரிகள் அழிந்தால் குடிநீருக்கு என்ன செய்வோம்’ ‘நீராதாரமே நமது வாழ்வாதாரம்’ என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைக ளில் ஏந்தியவாறு போரூர் ஏரிக் கரைகளில் நடந்து சென்றனர். இதன்மூலம் நீர் நிலைகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்