மயானத்திற்குச் செல்ல பாதை தேவை: வயல் வழியாக சடலங்களை சுமந்து செல்லும் முள்ளிக்குடி கிராம மக்கள் கோரிக்கை

By இ.மணிகண்டன்

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மயானத்திற்குச் செல்ல பாதை இல்லாததால் இறந்தவர்களின் சடலங்களை வயல் வழியாக சுமந்து செல்கின்றனர் முள்ளிக்குடி கிராம மக்கள்.

நரிக்குடி அருகே வேலானேரி ஒன்றியத்திற்கு உட்பட்டது முள்ளிக்குடி கிராமம். இங்கு 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இங்கு பல்வேறு சமுதாயத்தினரும் வசித்து வருகின்றனர். இறந்தவர்களின் சடலங்களைப் புதைப்பதற்ககாவும் எரியூட்டுவதற்காகவும் கிராமத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் வெவ்வேறு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட 3 மயானங்கள் உள்ளன.

ஆனால், இந்த மயானங்களுக்குச் செல்ல கிராமத்திலிருந்து பாதை இல்லை. இதனால், ஆண்டாண்டு காலமாக இப்பகுதி மக்கள் உயிரிழந்தவர்களின் சடலங்களை பாடை கட்டி வயல் வழியாகவே மயானத்திற்கு எடுத்துச்செல்கின்றனர்.

குறிப்பாக மழைக் காலங்களில் வயல் வெளியைக் கடந்து செல்வதில் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, முள்ளிக்குடி கிராமத்திலிருந்து மயானத்தி்குச் செல்ல பாதை அமைத்துக்கொடுக்குமாறு முதல்வரின் தனிப்பிரிவுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் பல முறை இப்பகுதி பொதுமக்கள் மனுக்கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் தொடர்ந்து சிமத்திற்கு ஆளாகி வருகிறார்கள் முள்ளிக்குடி கிராம மக்கள். மேலும், மயானத்திற்குச் செல்ல பாதைஅமைத்துக் கொடுக்குமாறும் அரசுக்கு முள்ளிக்குடி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்