பவுன் விலை ரூ.18,752 ஆக சரிவு: நகைக் கடைகளில் விற்பனை 40% அதிகரிப்பு - அலைமோதும் மக்கள் கூட்டம்

By எல்.ரேணுகா தேவி

கடந்த 4 ஆண்டுகளில் முதல் முறையாக பவுன் விலை நேற்று ரூ.18,752 ஆக குறைந்தது. தொடர் விலைச் சரிவு காரணமாக, மக்கள் கூட்டம் அலைமோதுவதால் தமிழக நகைக் கடைகளில் வியாபாரம் 40 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

இந்த வாரத் தொடக்கத்தில் இறங்குமுகமாக இருந்த தங்கத் தின் விலை நேற்று முன்தினம் சற்று உயர்ந்தது. ஆபரணத் தங்கம் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.2,380-க்கும் ஒரு பவுன் ரூ.19,040-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று மீண்டும் சரிந்தது. நேற்று காலையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.28 என பவுனுக்கு ரூ.224 குறைந்தது. இதனால் ஒரு கிராம் ரூ.2,352-க்கும், ஒரு பவுன் ரூ.18,816-க்கும் விற்பனையானது. மாலையில் கிராமுக்கு ரூ.8-ம் பவுனுக்கு ரூ.64-ம் குறைந்தது. இதனால், ஒரு கிராம் ரூ.2,344-க்கும், ஒரு பவுன் ரூ.18,752-க்கும் விற்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பவுன் தங்கம் இந்த அளவுக்கு விலை இறங்கியது இதுவே முதல் முறை.

24 கேரட் சுத்தத் தங்கம் (10 கிராம்) நேற்று முன்தினம் ரூ.25,450-க்கு விற்பனையானது. இது நேற்று காலை ரூ.300 குறைந்து ரூ.25,150-க்கும், மாலையில் மேலும் ரூ.150 குறைந்து ரூ.25,000-க்கும் விற்கப்பட்டது.

4 ஆண்டுகளுக்கு பிறகு..

தங்கம் விலை சரிவால் நகைக் கடைகளில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரிக்கிறது. இதுகுறித்து மெட் ராஸ் தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் மாநில செயலாளர் சாந்தகுமார் கூறியதாவது: சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்ததன் தொடர்ச்சி யாகவே இந்தியாவிலும் விலை குறைந்துள்ளது. கடந்த 4 ஆண்டு களுக்கு பிறகு, ஒரு பவுன் ரூ.18,752 என்ற அளவுக்கு இறங்கியுள்ளது.

மேலும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு குறைந் துள்ளது. தங்கம் விலை குறைந்து வருவதால் நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நகைக் கடைகளில் வியாபாரம் 40 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள் ளது. மக்களின் வசதிக்காக, கடைகள் திறந்திருக்கும் நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

38 mins ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்