தூத்துக்குடி,
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்காளில் ஆவணித் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டு ஆவணித் திருவிழா இன்று (ஆக.20) தொடங்கியது.
இதனை முன்னிட்டு நள்ளிரவு 1 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து உதய மார்த்தாண்ட தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
அதிகாலை 4 மணிக்கு கொடிப்பட்டமானது வெள்ளிப்பல்லக்கில் வைத்து 9 சந்தி வழியாக கொண்டுவரப்பட்டு, அதிகாலை 5.20 மணிக்கு கோயில் பிரகாரத்திலுள்ள செப்புக் கொடிமரத்தில், திருவிழா காப்பு கட்டிய தந்திரி இ.கற்பகவீரக்குமார் பட்டர் ஆவணித் திருவிழாவிற்கான கொடியினை ஏற்றினார்.
தொடர்ந்து கொடி மரத்துக்கு 16 வகை அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்காரமாகி, காலை 6.30 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத் சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள், திருக்கோயில் இணை ஆணையர் சி.குமரதுரை, கோயில் கண்காணிப்பாளர்கள் சுப்பிரமணியன், மாரிமுத்து, மோகன்ராஜ், ஏரல் சேர்மன் கோயில் பரம்பரை அக்தார் கருத்தபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆவணித் திருவிழா ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.
5-ம் திருவிழாவான வரும் 24-ம் தேதி சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை, 7-ம் திருவிழாவான 26-ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் உருகு சட்டசேவை,காலை 9 மணிக்கு மேல் வெற்றிவேல் சப்பரத்தில் எழுந்தருளலும், மாலை 4.30மணிக்கு மேல் சிவப்பு சாத்தியும் நடைபெறுகிறது.
8-ம் திருவிழாவான ஆகஸ்ட் 27-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.30மணிக்கு மேல் பச்சை சாத்தி நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 10-ம் திருவிழாவான ஆகஸ்ட் 29-ம் தேதி வியாழக்கிழமை காலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையர் சி.குமரதுரை மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago